நிரூப்பிற்கு கமல் செய்த அட்வைஸ்...விடாபிடியாக பிரியாங்கா மீது பாய்ந்த நிரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5, இன்றுடன் 83 நாட்களை கடந்து விட்டது. இருந்தாலும் பிரியங்யா - நிரூப் இடையேயான சண்டை, பனிப்போர் இதுவரை ஓய்ந்தபாடில்லை. வழக்கம் போல் இந்த வாரமும் இவர்களின் சண்டை பற்றி விசாரித்து, அறிவுரை வழங்கினார் கமல்.

Recommended Video

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! இந்த வாரம் BBல் இருந்து வெளியேறும் Contestant | Varun, Niroop, Akshara

ரசிகர்கள் வழக்கமாக எதிர்பார்க்கும் ஃபிரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வந்து அன்பை பொழிந்தனர். அதே சமயம் ரசிகர்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யமான நிகழ்வு ஏதும் நடக்கவில்லை.

அமீர் குடும்ப வருகை

அமீர் குடும்ப வருகை

அனைவரின் குடும்ப உறவுகளும் வந்த போது, தன்னை பார்க்க யாரும் வரவில்லை என அமீர் ஏக்கத்துடன் சோகமாக புலம்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவு அளித்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று வந்ததால், மிகவும் குஷியாகி விட்டார் அமீர்.

பிரியாணி டாஸ்க்

பிரியாணி டாஸ்க்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி செய்து, அதை யாருக்கு டெடிகேட் செய்ய போகிறீர்கள் என்பதை பகிர வேண்டும் என டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். ராஜு அவரது அப்பாவிற்கு டெடிகேட் செய்ய, பிரியங்கா நண்பர்களுக்கு டெடிகேட் செய்ய, சஞ்சீவ் இந்த பிரியாணியை நடிகர் விஜய்க்கு டெடிகேட் செய்வதாக கூறினார். விஜய்க்கு மட்டன் பிரியாணி மிகவும் என்பதையும் சொன்னார்.

குடும்ப உறவுகளின் வருகை

குடும்ப உறவுகளின் வருகை

குடும்ப உறவுகளின் வருகை பற்றி பேசிய கமல், பிரியங்கா மற்றும் அக்ஷராவின் குடும்பத்தினரின் வருகை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது. அக்ஷராவின் அண்ணன் -தங்கை பாசம் பாசமலர் படத்தை மீண்டும் பார்த்தது போல் இருந்தது என்றார். மற்ற போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றியும் கமல் பேசினார்.

நிரூப்பிற்கு அட்வைஸ்

நிரூப்பிற்கு அட்வைஸ்

கேப்டன்சி டாஸ்கில் நிரூப், பிரியங்காவை கடுமையாக திட்டியதை பற்றி கேட்ட கமல், சிபி உங்களை பற்றி கூறியது உங்களுக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றால், நீங்கள் பிரியங்கா பற்றி பேசியதும் எப்படித்தான். இது போட்டி. இதே போன்ற வார்த்தைகளை வெளியில் சென்று பயன்படுத்தி விடாதீர்கள். பல நட்புகளை இழக்க நேரிடும், பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அட்வைஸ் வழங்கினார்.

விடாபிடியாக இருந்த நிரூப்

விடாபிடியாக இருந்த நிரூப்


இருந்த போதும் பிரியங்கா பற்றி தான் கூறிய வார்த்தைகள் தவறு என நிரூப் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவருடன் பிரச்சனை என்றால் அந்த வாரம் முழுவதும் அவர்கள் தவறு என்பதை போலவே பிரியங்கா நடந்து கொள்வார். அதனால் தான் அவர் மீது எனக்கு கோபம் வந்து அது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X