என்னை விட்டுடுங்க நான் வெளியே போறேன்.. மறுபடியும் சீன் போட்ட அர்ச்சனா.. டிரெண்டாகும் #Archana

சென்னை: வீக்கெண்ட் ஆனாலே அர்ச்சனாவுக்கு அர்ச்சனை ஆரம்பித்து விடுகிறது.

பார்ஷியலா பாசம் காட்டுற அர்ச்சனாவுக்கு, நேத்து மறுபடியும் பாலாஜி முருகதாஸ், கமல் முன்னாடி அந்த விஷயத்தை எடுத்து பேசின உடனே, கோபம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு..

என்னை விட்டுடுங்க நான் வீட்டுக்கே போறேன் என போன வாரம் சொன்ன வசனத்தையே மீண்டும் சொல்லி அர்ச்சனா அக்கா சீன் போட்டதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் #Archana ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

மொதல்ல கிளம்பு

இதோ இது தான் டோர், மொதல்ல பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என நெட்டிசன்கள் டாம் ஜெர்ரி போட்டோவை போட்டு கலாய்த்து வருகின்றனர். தலைவர் பதவியை தான் உருவாக்கி வைத்துள்ள பெரிய கூட்டணியை வைத்து ஈசியா தட்டிப் பறிச்சிட்டு, இப்போ இப்படி என் பெயர் கெட்டுப் போகுதுன்னு அழுகுறதெல்லாம் ஓவர் சீன்.

டோட்டல் டேமேஜ்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ராணி போல இருந்த அர்ச்சனா அக்கா, விஜய் டிவியில் கிழிந்த கோணி போல ஆகிட்டாங்களே என வடிவேலு போட்டோக்களை வைத்து போடப்பட்டுள்ள மீம் குபீரென சிரிப்பை வரவழைக்கிறது. பாவம் அர்ச்சனா அக்கா டோட்டல் டேமேஜ் ஆகிட்டாங்க என கமெண்ட்டுகளும் குவிகின்றன.

இவங்க தான் அவங்க

காயத்ரி ரகுராம் பண்ண மாதிரியே அர்ச்சனா பண்ணி வருவதாகவும், ட்ரிகர் சக்தியை போலவே ரியோ ராஜ் ட்ரிகர் செய்வதாகவும், ஜூலியை போலவே அனிதா சம்பத் கண்ணீர் விட்டு அழுது நடிப்பதாகவும் இவங்க தான் அவங்க என்றும், இது பிக் பாஸ் தமிழ் 4 இல்லை பிக் பஸ் தமிழ் முதல் சீசன் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அர்ச்சனாவின் ஒரிஜினாலிட்டி

எல்லோரிடமும் அன்பு வைத்திருப்பது போல அர்ச்சனா நடித்து கேம் ஆடுறாங்க என மக்கள் நினைப்பதை அர்ச்சனாவுக்கு நல்லா புரியும் படி நேற்றைய எபிசோடில் கமல் எடுத்து சொன்னதும், அதை தெளிவாக புரிந்து கொண்ட அர்ச்சனா, மீண்டும் தான் வெளியேறுகிறேன் என வேற கேம் ஆடியதும், பாலா பற்றி மறுபடியும் புறம் பேசியதையும் பார்த்த ரசிகர்கள், அர்ச்சனாவின் ஒரிஜினாலிட்டி முகம் தெரிஞ்சுடுச்சு என திட்டி வருகின்றனர்.

அனிதாவை பாராட்டும் போது

கணவனை இழந்த பெண்களை சமூகத்தில் தவறாக பார்ப்பதும், சுப காரியங்களில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதும் தவறு என ஆணி அடித்தாற் போல பேசிய அனிதாவை அழ வைத்தார்கள். கமல் அனிதாவை பாராட்டிய உடனே பொறுத்துக் கொள்ள முடியாத அர்ச்சனா, யாருக்கு டீ வேணும், யாருக்கு காபி வேணும்னு எஸ்கேப் ஆனதை இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார்.

சுசித்ரா என்ட்ரிக்காக

சுசித்ரா என்ட்ரிக்காக

இப்படித்தான் சுரேஷ் தாத்தா அந்த ஆட்டம் ஆடிட்டு இருந்தார். அர்ச்சனா அக்கா என்ட்ரிக்காக கமல் சார் அவரை ஆஃப் பண்ணி வைத்தார். இப்போ, சுசித்ராவின் என்ட்ரிக்காக அர்ச்சனாவை ஆஃப் பண்றாங்க, இதெல்லாம் ஸ்க்ரிப்ட்டுன்னு சொன்னா, அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு டிப்ஸ் வேற #Suchitraக்கு முன்னாடி அர்ச்சனாலாம் தூசாக போறாங்க பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X