கர்ணன் படத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் தனுஷ் படம்.. வெளியானது தாய் கிழவி கிளிம்ப்ஸ்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review

இந்தப் படத்தில் 3 ஹீரோயின்கள் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். அதில் அவருக்கு யார் ஜோடி என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படத்தின் பாடல்கள் அனிருத் இசையில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. படத்தில் தனுஷ் 2 பாடல்களை பாடியுள்ளார்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

நடிகர் தனுஷ் -மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். இவர்கள் இருவரும் முன்னதாக யாரடி நீ மோகினி, குட்டி, உத்தரபுத்திரன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில், தற்போது 4வது படமாக திருச்சிற்றம்பலம் படம் உருவாகியுள்ளது. அதேபோல தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் திருச்சிற்றம்பலம்.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

தனுஷின் ஜெகமே தந்திரம், மாறன், அட்ராங்கி ரே, தி க்ரே மேன் என அடுத்தடுத்த 4 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகின. இதையடுத்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவரே வெறுப்பில் இருந்தார். இந்நிலையில், அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியானது. இசை வெளியீடும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது. இதனிடையே நாளைய தினம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

 தாய் கிழவி பாடல் கிளிம்ப்ஸ்

தாய் கிழவி பாடல் கிளிம்ப்ஸ்

அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் தாய் கிழவி உள்ளிட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. லிரிக் வீடியோக்களாக வெளியாகியுள்ளன. இதனிடையே நாளைய தினம் படத்தின் ரிலீசையொட்டி படத்தின் தாய் கிழவி பாடலின் கிளிம்ப்சை படக்குழு வெளியிட்டுள்ளது.

டெலிவரி பாயாக நடித்துள்ள தனுஷ்

டெலிவரி பாயாக நடித்துள்ள தனுஷ்

இந்தப் படத்தில் டெலிவரி பாய் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தை பார்த்த தனுஷ், படக்குழுவினருடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் அவுட்புட் திருப்தியளித்துள்ளதாக தனுஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த தளங்கள்

அடுத்தடுத்த தளங்கள்

தன்னுடைய இயல்பான நடிப்பால் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளவர் நடிகர் தனுஷ். எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் லுக்கில் இருக்கும் ஹீரோக்கள் ரசிகர்களை அதிகமாக கவர்வார்கள். அந்த வகையில் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த தளங்களுக்கு பயணமாகி வருகிறார் தனுஷ். அவரின் திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X