Don't Miss!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- News
நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
- Finance
உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?
- Sports
அன்று யுவ்ராஜ் சிங், இன்று பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை.. அதுவும் பிராட் பவுலிங்கில்..
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கன்னட திரையுலகில் இருந்து இன்னொரு பான் இந்தியா படம்.. விக்ராந்த் ரோணா டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை: கேஜிஎஃப் 2, 777 சார்லியை தொடர்ந்து இந்த ஆண்டு இன்னொரு தரமான கன்னட படமாக கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் அனுப் பந்தாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீத்தா அசோக் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடித்துள்ள விக்ராந்த் ரோணா 3டியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது அதன் தமிழ் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
என்னது...ப்ரத்விராஜ்
தோல்விக்கு
அக்ஷய்குமார்
தான்
காரணமா...தயாரிப்பாளர்
சொன்ன
பகீர்
தகவல்

இந்திய திரையுலகில் நம்பர் ஒன்
தென்னிந்திய சினிமாவிலேயே கடைசி இடத்தில் இருந்த கன்னட திரையுலகம் இன்று கேஜிஎஃப் 2 படத்தால் டோலிவுட்டையே பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை விட கேஜிஎஃப் 2 படத்திற்குத் தான் அதிக வசூல் என்பது ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அசுர வளர்ச்சி
கேஜிஎஃப் 2 படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான 777 சார்லி திரைப்படமும் கன்னட ரசிகர்களை கடந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அசுர வேக வளர்ச்சியில் கன்னட திரையுலகம் வளர்ந்து வருகிறது. டோலிவுட், சாண்டில்வுட், கோலிவுட், பாலிவுட் என வரிசைப்படுத்தும் அளவுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், இன்னொரு பிரம்மாண்டமான படைப்பு விரைவில் வெளியாக காத்திருக்கிறது.
விக்ராந்த் ரோணா டிரைலர்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தனது ட்வீட் மூலம் பதிலடி கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை ட்ரோல் செய்து வெளுத்து வாங்கும் அளவுக்கு சம்பவத்தை பண்ணிவிட்டு சைலன்ட்டாக இருந்த கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி உள்ள விக்ராந்த் ரோணா படத்தின் அட்டகாசமான டிரைலர் தான் தற்போது வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் இருந்து அடுத்த பான் இந்தியா திரைப்படமா என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

கிச்சா சுதீப்
இயக்குநர் ராஜமெளலியின் நான் ஈ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து நாடு முழுவதும் ரசிகர்களை ஈர்த்தவர் கிச்சா சுதிப். பிரபாஸின் பாகுபலி படத்திலும் நட்புக்காக ஒரு சின்ன ரோலில் நடித்து சென்றிருப்பார். தமிழில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முடிஞ்சா இவன புடி படம் இங்கே அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால், கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக அசத்தி வருகிறார். விக்ராந்த் ரோணா பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் வெளியீடு
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள விக்ராந்த் ரோணா படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. பான் இந்தியா படமான இந்த படத்தின் தமிழ் டிரைலரை தற்போது நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மேலும், பக்கா விஷுவல் ட்ரீட் என ட்வீட் போட்டிருக்கும் தனுஷ் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கேஜிஎஃப் 2 வசூலை வீழ்த்துமா விக்ராந்த் ரோணா என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.