கே.ஜி.எஃப் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்குமா அவனே ஸ்ரீமன் நாராயணா

Recommended Video

AVANE SRIMANNNARAYANA TEAM INTERVIEW | RAKSHIT SHETTY|V-CONNECT|FILMIBEAT TAMIL

சென்னை: இயக்குநர் சச்சின் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா படம் நாளை திரைக்கு வருகிறது.

2020 புத்தாண்டுக்கு பிறகு வெளியாகவுள்ள மிகப்பெரிய படம் அவனே ஸ்ரீமன் நாராயணா தான்.

கே.ஜி.எஃப் படம் போல இந்த படமும் கன்னட படம் தான். ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

கன்னட திரையுலகில் இருந்து வெளியான கே.ஜி.எஃப் படம் உலகளவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இந்நிலையில், அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா படம் நாளைக்கு வெளியாகவுள்ள நிலையில், கே.ஜி.எஃப் படம் படைத்த மிகப்பெரிய சாதனையை இந்த படமும் படைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாகும் சாண்டல்வுட்

விரிவாகும் சாண்டல்வுட்

கோலிவுட், டோலிவுட்டுக்கு பிறகு மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் கன்னட திரையுலகமான சாண்டல்வுட்டிலும் வெளியாகி வருகின்றன. 2018ம் ஆண்டு யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

அவனே ஸ்ரீமன் நாராயணா

அவனே ஸ்ரீமன் நாராயணா

கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா படம் நாளை திரைக்கு வருகிறது. இயக்குநர் சச்சின் இயக்கத்தில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார்.

100 கோடி பட்ஜெட்

100 கோடி பட்ஜெட்

கன்னட சினிமாவில் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் அவனே ஸ்ரீமன் நாராயணா. 2020ம் ஆண்டில் வெளியாகவுள்ள முதல் ஹை பட்ஜெட் படமும் இதுதான்.

5 மொழிகள்

5 மொழிகள்

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான ஐந்து மொழிகளில் அவனே ஸ்ரீமன் நாராயணா நாளை வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு எப்படி

எதிர்பார்ப்பு எப்படி

அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் ஹேண்ட்ஸ் அப் வீடியோ பாடல் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு கொடுத்த அளவுக்கு இந்த படத்திற்கும் வரவேற்பும் வசூலும் கிடைக்கும் என தெரிகிறது.

விவேக்

விவேக்

மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து விஜய் படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த பாடலாசிரியர் விவேக் தர்பார், பட்டாஸ் என பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். தமிழ் வெர்ஷனில் வெளியாகவுள்ள ஸ்ரீமன் நாராயணா படத்திலும் இவர் எழுதியுள்ள பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Read more about: rakshit shetty
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X