குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்திற்கு தடை...அதிர்ச்சியில் படக்குழு

சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அரபு நாடுகளில் தொடர்ந்து பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் யூட்யூப்பில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது. உலக அளவில் தொடர்ந்து டிரெண்டிங் ஆகி உள்ளது.

 டிவியில் விஜய் பேட்டி

டிவியில் விஜய் பேட்டி

பீஸ்ட் டிரைலர் ரிலீசை தொடர்ந்து ப்ரொமோஷன் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ப்ரொமோஷனுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், டிவியில் தோன்றி பேட்டி அளிக்க உள்ளார். டைரக்டர் நெல்சன் திலீப்குமார் தான் விஜய்யை பேட்டி எடுக்க உள்ளார். அவர் கேட்கும் விவகாரமான கேள்விகளுக்கு விஜய் ஜாலியாக பதில் சொல்லும் பேட்டி ஏப்ரல் 10 ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

 இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு

இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பீஸ்ட் டிரைலர் அமைந்துள்ளதாகவும், இதனால் இந்தியாவிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. விஜய் மற்றும் டைரக்டர் வீடு முன் போராட்டம் நடத்த உள்ளதாகவும், வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்திருந்தனர். தற்போது கத்தாரிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட்டுக்கு அடுத்தடுத்து தடை

பீஸ்ட்டுக்கு அடுத்தடுத்து தடை

பீஸ்ட் ரிலீசை திருவிழாவாக கொண்டாட விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில், குவைத் அரசு பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது வன்முறையயை சித்தரிக்கும் விதமாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது தான் தடைக்கு காரணம் என சொல்லப்பட்டது. குவைத் நாட்டை தொடர்ந்து, கத்தார் நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat
பீஸ்ட் வசூலை பாதிக்குமா

பீஸ்ட் வசூலை பாதிக்குமா

குவைத், கத்தார் என அடுத்தடுத்து அரபு நாடுகளில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருவதால் இது படத்தின் வசூலை பாதிக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரபு நாடுகளில் வெறும் 5 சதவீதம் மட்டும் வசூல் கிடைப்பதால், இது பீஸ்ட் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X