தமிழ்நாட்டில் தளபதி மட்டும்தான்.. முதல் நாளே 100 கோடி ஓபனிங்.. அடுத்தடுத்து 2 படங்களில் சாதனை!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ரஜினிகாந்த், அஜித், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூர்யா, தோனி என அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக கோட் படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை வெங்கட் பிரபு அடுக்கி வைத்துள்ளார்.
கோட் படத்தில் இளம் வயது விஜய்யை காட்டப் போகிறார் வெங்கட் பிரபு என்றதும் ஸ்பார்க் பாடலில் அந்த விஜய்யை காட்டிய போது யாருடா இது அமல் டேவிஸ் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன.

அதன் பிறகு அதை எல்லாம் முடிந்த வரை சரி செய்து படத்தை வெளியிட்டுள்ளனர். படத்தின் 2ம் பாதி முழுவதும் இளைய தளபதியின் அலப்பறை தான் என்பதால் அந்த கதாபாத்திரம் சொதப்பி இருந்தால் படமே சொதப்பியிருக்கும் ஆனால், ஜீவன்/சஞ்சய் என்கிற பெயரில் வரும் இளைய தளபதியின் போர்ஷன் தான் தளபதி ரசிகர்களுக்கு இந்த கோட் படத்தில் ட்ரீட்டே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தளபதி மட்டும்தான்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் 146 கோடி ரூபாய் வசூல் செய்தது தான் இதுவரை தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் என்கிற ரெக்கார்டாக உள்ளது. அந்த ரெக்கார்டை கோட் முறியடிக்குமா? என்கிற கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தியே முதல் நாளில் முறியடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து லாங் ரன் படம் ஓடி முறியடிக்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், முதல் நாளில் 2வது 100 கோடி வசூல் படத்தையும் விஜய் கொடுத்துள்ளார்.
2 முறை 100 கோடி வசூல்: லியோ படத்தை தொடர்ந்து கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், 2 முறை முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டி நடிகர் விஜய் மிகப்பெரிய கிரவுட் புல்லர் என்பதை நிரூபித்துள்ளார் என தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #GOATBlockBuster ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஜெயிலர் முதல் நாள் வசூல்: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 98 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது என்றும் 100 கோடி வசூலை அந்த படம் கடக்கவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், ஜெயிலர் திரைப்படமும் 600 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் வேட்டையாடுமா?: தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இந்த முறை அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை டார்கெட் செய்து வருகிறது. போட்டிக்கு சூர்யாவின் கங்குவா படமும் ரிலீஸ் ஆகாத நிலையில், வேட்டையன் திரைப்படமும் முதல் நாளில் 100 கோடி வசூலை அசால்ட்டாக கடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா கலெக்ஷன் எப்படி இருக்கும்?: கோட் படத்தின் வசூலை வேட்டையன் முறியடிக்குமா? அல்லது இந்த ஆண்டு வெளியாகவுள்ள சூர்யாவின் கங்குவா படம் முறியடிக்குமா? தமிழ் சினிமாவுக்கு முதல் 1000 கோடி வசூலை இந்த 3 படங்களில் எந்த படம் கொடுக்கும் என்கிற கேள்விகளுக்கு சீக்கிரமே பதில் கிடைத்து விடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











