Vidamuyarchi: லியோ வில்லனை அலேக்காக தூக்கிய அஜித்.. துபாயில் தூள் கிளப்பப்போகும் விடாமுயற்சி!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்கிற வருத்தம் அஜித் ரசிகர்களுக்கு இருந்தாலும், தனது ரசிகர்களுக்கு தரமான சம்பவத்தை கொடுக்க வேண்டும் என்கிற முழு முயற்சியில் அஜித் இறங்கி விட்டாராம்.
ஏற்கனவே லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவை விடாமுயற்சி படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்து வில்லனையும் லியோ படத்தில் இருந்தே அலேக்காக தூக்கிச் சென்று விட்டார் அஜித் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியையும் லாக் செய்து விட்டார் நடிகர் அஜித் உள்ளிட்ட தகவல்களும் கசிந்துள்ளன.
மே 1ம் தேதி ரிலீஸ்: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படம் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கேப்பில் வந்தாலும் அஜித் ரசிகர்கள் முதல் நாளில் தியேட்டரை தெறிக்கவிட்டு மீண்டும் ஒரு வசூல் உச்சத்தை சாத்தியப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ வில்லன்: கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் தென்னிந்தியா பக்கம் வில்லனாக என்ட்ரி கொடுத்த சஞ்சய் தத் விஜய்யின் லியோ படத்தில் ஆண்டனி தாஸ் ஆக நடித்து வரும் நிலையில், அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் சஞ்சய் தத் தான் வில்லன் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது.
தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே சஞ்சய் தத் டென்ட் போட்டு விடுவார் போலத் தெரிகிறதே என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

த்ரிஷா ஜோடி: ஏற்கனவே லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா தான் விடாமுயற்சி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
மலையாளத்தில் டொவினோ தாமஸ் படத்தில் நடித்து வரும் த்ரிஷா அந்த படத்தை முடித்து விட்டு விரைவில் ஆரம்பமாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
துபாயில் வீடு: நடிகர் அஜித்துக்கு துபாயில் சொந்தமாகவே ஒரு வீடு இருப்பதாகவும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அங்கே கிட்டத்தட்ட 3 மாதங்கள் நடைபெற உள்ள நிலையில், ஹோட்டல்களில் தங்குவதை தவிர்த்து விட்டு தனது சொந்த வீட்டிலேயே தங்க அஜித் முடிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











