For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு பக்கம் நடிப்பு.. இன்னொரு பக்கம் இயக்கம்.. லாக்டவுனுக்கு பிறகு ரவுண்டு கட்டி ஆடப் போகும் தனுஷ்!

  |

  சென்னை: தனுஷால் மட்டுமே எப்படி இது சாத்தியமாகிறது என கோலிவுட்டே ஆச்சர்யத்தில் பார்க்கும் அளவுக்கு லாக்டவுனுக்கு பிறகு பல திட்டங்களை வகுத்து வைத்துள்ளார் தனுஷ்.

  Dhanush Heroine Weight Loss Journey • Sara Ali Khan | Strange Re, Love Aaj Kal, Simba

  எத்தனை நாட்கள் ஓய்வெடுக்கிறமோ, அதற்கு மேலும் உழைக்க வேண்டும் என்ற முனைப்புடன், எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்ற பக்கா பிளான்களை போட்டு வருகிறார்.

  ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கும் தனுஷ், லாக்டவுனுக்கு பிறகு நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்த உள்ளாராம்.

  விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை.. தலைமறைவான காதலன் அதிரடி கைது!விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை.. தலைமறைவான காதலன் அதிரடி கைது!

  கார்த்திக் சுப்புராஜ் படம்

  கார்த்திக் சுப்புராஜ் படம்

  சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி முடித்து விட்டு, அடுத்ததாக விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரமை வைத்து இன்னுமொரு கேங்ஸ்டர் படத்தை இயக்க ரெடியாகி விட்டார். தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படம் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் திரைக்கு வர காத்திருக்கிறது.

  தனுஷ் இயக்கத்தில்

  தனுஷ் இயக்கத்தில்

  இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிப்பில் மட்டுமின்றி இயக்கத்திலும் தன்னால் சாதிக்க முடியும் என நிரூபித்த படம் தான் ப. பாண்டி. ராஜ்கிரண், ரேவதி, மடோனா சபாஸ்டியன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு ரிலீசான அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

  வரலாற்று படம்

  வரலாற்று படம்

  இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது இயக்கத்தில் இரண்டாவது படத்தை இயக்க கடந்த ஆண்டு திட்டமிட்டு பணிகளை துவக்கினார். அசுரன், பட்டாஸ், ஜகமே தந்திரம் என ஷூட்டிங்கில் பிசியானாதால், தனது கனவு படமான வரலாற்று படத்தின் ஷூட்டிங்கை அப்படியே நிறுத்தி வைத்திருந்தார். அந்த படம் கைவிடப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

  நாகார்ஜுனாவுடன்

  நாகார்ஜுனாவுடன்

  ராட்சசன், தோழா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, அதிதி ராவ், எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் மற்றும் தனுஷ் நடிப்பில் தனுஷ் இயக்கப் போகும் ‘நான் ருத்ரன்' திரைப்படம் லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்போவதாகவும், நடிப்பு மற்றும் இயக்கம் என இரு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்ய தனுஷ் தயாராகி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

  பல படங்கள்

  பல படங்கள்

  ஆனால், அந்த சுதந்திர போராட்ட பின்னணியை கொண்ட படத்தின் ஷூட்டிங் தற்போது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் கோலிவுட்டில் எழுந்துள்ளது. நடிகர் தனுஷ் தமிழில் மாரி செல்வ்ராஜின் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘டி 43', அக்‌ஷய் குமார், சாரா அலி கானுடன் அட்ரங்கி ரே மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கை எப்படி திட்டமிட்டு நடத்தப்போகிறார் என்ற பேச்சுதான் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  தாமதமாகும்

  தாமதமாகும்

  மேலும், லாக்டவுன் முடிந்தாலும், முன்பு போல அதிக ஆட்களை வைத்து, இஷ்டத்துக்கு படப்பிடிப்புகள் நடத்த முடியாது என்றும், ஒவ்வொரு படத்தையும் எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய அதிக நாட்கள் தேவைப்படும் என்பதால், நிச்சயம் தனுஷின் இந்த படங்கள் வெளியாகவும், அவர் இயக்கத்தில் உருவாக உள்ள ‘DD 2' படத்தின் ஷூட்டிங்கும் தாமதமாகும் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

  English summary
  After Lockdown, Dhanush will plan to resume his second directorial film ‘Naan Rudran’. Meanwhile he waiting for the release of Jagame Thandiram and he will resume shooting for Karnan and few other movies too.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X