Rathnakumar: லோகேஷை தொடர்ந்து ரத்னகுமார்.. என்னங்கய்யா இப்படி பண்றீங்க!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை வெற்றிபபடமாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதன் வெற்றிக் கொண்டாட்டம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படத்தையடுத்து ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது.
இதற்காக சமூக வலைதளங்களில் இருந்து 6 மாதங்கள் இடைவெளி எடுக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள லியோ படம் கடந்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 500 கோடி ரூபாய்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
லியோ வெற்றிவிழா: முன்னதாக இந்தப் படத்தின் இசை விழா சென்னையில் திட்டமிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே படம் கடந்த 19ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள லியோ கடந்த 14 நாட்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமாக கலெக்ஷனை ஈட்டிடியுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்: இதனிடையே நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பங்கேற்பு ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் அவர் பேசியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் லோகேஷ் இடைவெளி: இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனரகாஜ், நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இதையொட்டு சமூக வலைதளங்களில் இருந்து தான் 6 மாத காலத்திற்கு இடைவெளி எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

லோகேஷை தொடரும் ரத்னகுமார்: இதனிடையே இயக்குநர் ரத்னகுமாரும் தன்னுடைய அடுத்தப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொளள்வுள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய அடுத்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகும்வரையில் தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் படமியக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்கிரிப்ட் வேலைகளில் ரத்னகுமார் பிசி: இந்தப் படம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியான நிலையில், படத்தில் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அவருடன் நயன்தாராவும் இணையுவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், நயன்தாரா படத்தில் நடிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ரத்னகுமார் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











