Shruthi Shanmugapriya - கணவரை இழந்த துயரம்.. காட்டுக்குள் சென்ற நடிகை.. துக்கத்திலிருந்து மீள்வதற்கான முயற்சி

சென்னை: Shruthi Shanmugapriya (ஸ்ருதி ஷண்முகப்ரியா) கணவரை இழந்ததை அடுத்து சின்னத்திரை நடிகை ஸ்ருதி காட்டுக்குள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஃபேமஸான ஒன்றாக இருந்தது நாதஸ்வரம் சீரியல். மெட்டி ஒலி புகழ் திருமுருகன் இயக்கிய அந்த சீரியலில் நடித்து ஃபேமஸ் ஆனவர் ஸ்ருதி சண்முகப்ரியா. அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களிலும் நடிதார். பிஸியாக நடித்து அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக சின்னத்திரையில் மாறியிருக்கிறார் ஸ்ருதி.

After losing her husband actress Shruthi has traveled to the forest

அரவிந்த் சேகர்: இவர் அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். அடிப்படையில் கட்டட பொறியாளரான அரவிந்த் சேகர் கடந்த ஆண்டு நடந்த மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை வென்றவர். மேலும் ஜிம் ஒன்றை சொந்தமாக வைத்து பலருக்கு ஃபிட்னெஸ் ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சேகர் மரணம்: திருமணத்துக்கு பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஸ்ருதி ஷண்முகப்ரியா அரவிந்த் சேகருடன் இணைந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்தார். இரண்டு பேரும் போடும் வீடியோக்களும், போஸ்ட்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியும் வந்தன. இந்தச் சூழலில் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

என்ன நடந்தது?: அதாவது கடந்த மாதம் அரவிந்த் சேகர் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது உயிரும் பிரிந்திருக்கிறது. அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது. திருமணமாகி ஒரே வருடத்தில் இப்படி நடந்திருப்பது ஸ்ருதியை நிலைகுலைய வைத்தது. கணவரின் மரணம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டிருந்த ஸ்ருதி எனது கணவர் உயிரிழப்பு தொடர்பாக யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார்.

காட்டுக்குள் பயணம்: அரவிந்த் உயிரிழப்பு ஸ்ருதியை ரொம்பவே தனிமையில் தள்ளியிருக்கிறது. இருந்தாலும் மீண்டு வர வேண்டும் என்பதால் யாரின் துணையையும் அவர் தேடாமல் இயற்கையின் துணையை தேடியிருக்கிறார். அதன்படி காட்டுக்குள் சென்றிருக்கும் அவர் அங்கு வன விலங்குகளை புகைப்படம் எடுத்திருக்கிறார்.

மேலும் காட்டுக்குள் ஒரு நதியை கடக்கும்போது தானும், அரவிந்தும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்தபடி ஒரு வீடியோவை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் காட்டுக்குள் சென்றது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது. மேலும் விரைவில் மீண்டு வாருங்கள் ஸ்ருதி என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X