அடிதூள்...வெங்கட் பிரபுவின் அடுத்த பட டைட்டில் இதுதான்

சென்னை : பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய ரோல்களில் நடித்தார்.

2007 ம் ஆண்டு இளைஞர்களை கவரும் விதமாக, வித்தியாசமான கதை அம்சத்துடன் சென்னை 28 படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்று, தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார்.

 10 ஆண்டுக்கு பிறகு ஹிட்

10 ஆண்டுக்கு பிறகு ஹிட்

அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படத்திற்கு பிறகு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் மாநாடு படத்தை இயக்கி மிகப் பெரிய ஹிட் கொடுத்தார். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படம் வசூல், விருது, பாராட்டு என அள்ளி குவித்து வருகிறது. டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட த்ரில்லர் படமான மாநாடு தியேட்டர்களில் 50 நாட்களை கடந்துள்ளது. ஓடிடி.,யிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த பட டைட்டில்

அடுத்த பட டைட்டில்

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் 10 வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று ஃபஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து இயக்க உள்ள படத்திற்கு மன்மத லீலை என பெயரிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் லீட் ரோலில் நடிக்கும் இந்த படம் முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட உள்ளதாம். இந்த படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளது.

வித்தியாசமான ஃபஸ்ட்லுக்

வித்தியாசமான ஃபஸ்ட்லுக்

இந்த போஸ்டரில் முகத்தில் காயத்துடன் தாடி வைத்த கோபமான முகம் ஒரு பாதியாகவும், தாடி இல்லாமல் லிப்ஸ்டிக் கறையுடன் இருக்கும் சிரித்த முகம். சுற்றிலும் ரோஜா பூக்கள், லிப்ஸ்டிக், ஹைஹீல்ஸ், ஐ லவ் யூ எழுதப்பட்ட இந்த கடிதம், ஹார்ட் ஆகியன அடங்கியதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படத்தில் அசோக் செல்வன் இரட்டை ரோலில் நடிக்கிறார் என்பது தெளிவாகி உள்ளது.

இவர் தான் மியூசிக்கா

இவர் தான் மியூசிக்கா

இந்த படத்தில் சம்ழுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ள இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதே சமயம் பிரேம்ஜி அமரன் நடிக்க போகிறாரா இல்லையா என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X