மாஃபியாவை தொடர்ந்து மாறன்.. டி43 படத்திற்கு கார்த்திக் நரேன் வைத்துள்ள டைட்டில் வொர்க்கவுட் ஆகுமா?
சென்னை: நடிகர் தனுஷின் டி43 படத்திற்கு மாறன் என இயக்குநர் கார்த்திக் நரேன் டைட்டில் வைத்துள்ளார். அதன் வெறித்தனமான ஃபர்ஸ் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ள மாறன் பட ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் ரசிகர்கள் #D43FirstLook என்றே டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் மா டைட்டில் வொர்க்கவுட் ஆகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மாறன் ஃபர்ஸ்ட் லுக்
சத்யஜோதி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறன். நடிகர் தனுஷின் 43வது படமான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் உடன் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

பிறந்தநாள் பரிசு
நடிகர் தனுஷின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியாகி இருக்கிறது. இன்று மாலை ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ஸ்பெஷலான வீடியோ பாடல் ஒன்றும் வெளியாகவிருக்கிறது.

கார்த்திக் நரேன்
துருவங்கள் பதினாறு என்கிற படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்ததாக அவர் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் ரிலீஸ் பிரச்சனை காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில், விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகப் போகிறது.

மீண்டும் 'மா'வா
நரகாசூரன் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா திரைப்படம் பில்டப் பண்ணப் பட்ட அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் மாவில் தொடங்கும் மாறன் என்கிற டைட்டிலை இயக்குநர் வைத்திருப்பது எந்த அளவுக்கு கைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாஸ்டர் எஃபெக்டா
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் தான் மாறன் படத்திலும் ஹீரோயின். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முதல் எழுத்தான 'மா'வை டைட்டிலாக்கி உள்ளதால் மாஸ்டர் எஃபெக்டா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

வெற்றி மாறன்
மாறன் எனும் பெயர் நடிகர் தனுஷுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் மிகவும் பரீட்சையமான ஒன்று தான். நடிகர் தனுஷை தேசிய விருது நடிகராக மாற்றியது இயக்குநர் வெற்றி மாறன் தானே.. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள வெற்றி மாறனை மனதில் வைத்துக் கொண்டு மாறன் டைட்டில் உருவாகி உள்ளதா என்கிற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. டைட்டில் எப்படி இருந்தாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை நச்சுன்னு இருந்தால் போதும். தனுஷ் தனது நடிப்பால் அசத்தி ஹிட் கொடுத்து விடுவார்.


Click it and Unblock the Notifications











