ராமாயணம், மகாபாரதம், சக்திமானை தொடர்ந்து.. அடுத்த ஒரு சூப்பர் ஹிட் தொடரை கையில் எடுத்த தூர்தர்ஷன்!

மும்பை: லாக்டவுன் காரணமாக புதிய சீரியல்கள் ஒளிபரப்ப முடியாத சூழலில், எவர்க்ரீன் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பி பழைய ஃபார்முக்கு மாறி வருகிறது தூர்தர்ஷன் தொலைக்காட்சி.

Recommended Video

Second Marriage? Anchor DD Fans Intractions | Vignesh Shivan, Trisha, Dheena, Followers

ராமானந்த் சாகரின் ராமாயணம் ரிலீசாகி மீண்டும் உலக சாதனை படைத்த நிலையில், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ணா மற்றும் 90ஸ் கிட்ஸுக்கு பிடித்த சக்திமான் உள்ளிட்ட பல தொடர்கள் தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு கலக்கி வருகின்றன.

After Mahabharat, Flop Show will be retelecast in Doordarshan

இந்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சவிதா பாட்டியின் கிளாசிக் காமெடி ஷோவான 'Flop Show’ மறு ஒளிபரப்புக்கு தயாராகி இருக்கிறது. இதன் அறிவிப்பை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ள நிலையில், அந்த செய்தி அறிந்த சவிதா பாட்டி மிகவும் சந்தோஷப்படுவதாக கூறியுள்ளார்.

1989ல் வெளியாகி அன்றைய காலக்கட்ட ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை தொடரான Flop Showல் நாயகனாக சவிதாவின் கணவரும் மறைந்த பிரபல நடிகர் ஜஸ்பல் பாட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் விபத்தில் நடிகர் ஜஸ்பல் மரணமடைந்தார். இந்த தொடரில் நடித்த மற்றொரு நடிகரான விவேக் ஷாக் சில ஆண்டுகளுக்கு முன்னதாக மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

அந்த காலத்தில் தனது இயக்கத்தில் தனது கணவர் நடிப்பில் வெளியான சீரியல் மீண்டும் மக்களை மகிழ்விக்க வருவது சந்தோஷத்தையே கொடுப்பதாகக் சவீதா PTIக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த மே 18 முதல் தினமும் மாலை 6 மணிக்கு இந்த ஷோ தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

அமேசான், நெட்பிளிக்ஸ் என வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள இளைஞர்களை இந்த பழைய சீரியல்கள் மடைமாற்றி பழைய நினைவலைகளை மிதக்க விட்டு வருவதை, இளைய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் உணர்ந்து கொண்டு நல்ல படைப்புகளை கொடுத்தால், அது காலத்தால் அழியாது நிற்கும் என்பதை உணர்த்துவதாக தூர்தர்ஷன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X