»   »  கமலின் மகாநதிக்கு அப்புறம் டி16 தான்: கார்த்திக்கை பாராட்டிய சிம்பு

கமலின் மகாநதிக்கு அப்புறம் டி16 தான்: கார்த்திக்கை பாராட்டிய சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவை நினைத்து துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் பெருமைப்பட்டுள்ளார்.

வெறும் 21 வயதே ஆன கோவையை சேர்ந்த கார்த்திக் நரேன் தான் கோலிவுட்டின் இன்றைய ஹாட் டாபிக். பொடியனாக இருந்தாலும் முதல் படத்திலேயே கில்லி என்பதை நிரூபித்துள்ளாரே என்று பலரும் வியக்கிறார்கள்.

கார்த்திக் நரேன் வேறு யாரும் அல்ல துருவங்கள் 16 ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தான்.

பாராட்டு

பாராட்டு

துருவங்கள் 16 படத்தை பார்க்கும் ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகினரும் கார்த்திக் நரேனை பாராட்டி வருகிறார்கள். ஜமாய்ச்சிட்டீங்க கார்த்திக் என்று ஆளாளுக்கு அவரை புகழ்கிறார்கள்.

சிம்பு

சிம்பு

1994ம் ஆண்டு வெளியான கமல் ஹாஸனின் மகாநதிக்கு பிறகு உங்கள் படத்திற்கு தான் திரையுலகில் இவ்வளவு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் என சிம்பு கார்த்திக்கை பாராட்டியுள்ளார்.

கார்த்திக்

சிம்பு பாராட்டியதை கேட்டு கார்த்திக் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதை அவர் சமூக வலைதளத்திலும் தெரிவித்துள்ளார். நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் உண்மையானவர்களில் சிம்புவும் ஒருவர் என்கிறார் கார்த்திக்.

பக்குவம்

பக்குவம்

மனதில் பட்டதை பயப்படாமல் பேசும் சிம்பு சக கலைஞர்களை பாராட்டவும் தயங்குவது இல்லை. இளம் வயதில் இயக்குனர் ஆன சிம்புவுக்கு கார்த்திக்கின் வெற்றியை உணர முடிந்துள்ளது.

Read more about: simbu, சிம்பு
English summary
Simbu has appreciated Karthick Naren saying that, after Mahanadhi, D16 got rave reviews from the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil