டி 43... தனுசுடன் இணையும் மற்றொரு மாஸ்டர் நடிகர்... லேட்டஸ் தகவல்
சென்னை : துருவங்கள் 16, மாஃபியா படங்களை இயக்கிய டைரக்டர் கார்த்திக் நரேன், தனுஷின் 43 வது படத்தை இயக்க உள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
மாஸ்டர், பேட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகனன் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு மாஸ்டர் நடிகரும் இப்படத்தை இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வேறு யாருமில்லை மாஸ்டர் மகேந்திரன் தான். மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி படத்தில் நடித்த மகேந்திரன், டி 43 படத்திலும் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது.
டி 43 படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, சூரரை போற்று படத்தில் நடித்த கிருஷ்ண குமார் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நிறைவடைந்தது.
டி 43 படத்தில் மாஸ்டர் மகேந்திரன் இணைந்துள்ளதை சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. திறமையான நடிகர் மகேந்திரனை டி 43 படத்தில் வரவேற்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











