மீனா மட்டுமல்ல குஷ்புவும் இருக்காங்க.. அண்ணாமலை, முத்து ரேஞ்சுக்கு உருவாகப்போகும் தலைவர் 168!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 'தலைவர் 168' படத்தில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

மன்னன், பாண்டியன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை குஷ்பு 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

குஷ்பு

தலைவர் 168 படத்தில் மீனா 24 வருஷத்துக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கிறாங்க என்ற அறிவிப்பு வெளியானதும், குஷ்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் நிலவியது. இந்நிலையில், உடனடியாக குஷ்பு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், தலைவர் 168ல் குஷ்புவும் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அடுத்தது யாரு

தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸிடம், அடுத்தது ரேவதி, ராதா, அம்பிகா, அமலா இவங்க யாராவது நடிக்கிறாங்களா.. இப்பவே சொல்லிடுங்க என மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

ஸ்ரீதேவி செத்துட்டாங்க இல்லைன்னா

மீண்டும் அண்ணாமலை ஜோடி தரமான சம்பவம் என பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், ஸ்ரீதேவி செத்துப்போச்சு இல்லைன்னா சிறுத்தைக் குட்டி அவங்களையும் தலைவர் 168ல் சேத்துடும் போல என ட்வீட் போட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் அம்மா

கீர்த்தி சுரேஷ் அம்மா நெற்றிகண்ல தலைவருக்கு ஜோடி.. அவங்களுக்கு குழந்தை பிறந்து... அந்த குழந்தை ஹீரோயினாகி.. இப்ப தலைவர் படம்... தலைவர் அதே இடத்தில் நிலைச்சி இருக்கார்.. என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

அடுத்தது நீலாம்பரியா

அடேய் என்னங்கடா லைனா இறக்கிகிட்டே இருக்கீங்க அடுத்து யாரு நீலாம்பரியா என படையப்பா படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ரம்யா கிருஷ்ணனையும் தலைவர் 168ல் சேர்த்துடுங்க என இந்த ரசிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X