என்ன பிக் பாஸ் இதெல்லாம்.. கிரைம் ரேட் கூடிட்டே போகுது.. அப்போ மீரா மிதுன்.. இப்போ விக்ரமன்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் ஆட்கள் எல்லாம் வில்லங்கம் பிடித்தவர்களாகவும், சர்ச்சைக்கு கொஞ்சமும் குறைவில்லாத நபர்களாகவே எடுத்து வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், சமீப காலமாக குற்றவாளிகளாக தேடித் தேடி நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கொண்டு வந்து மக்களை முட்டாள் ஆக்குறீங்களா என பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
போட்டியாளர்கள் என்கிற பெயரில் சர்ச்சையான நபர்களை பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்து வந்து தினமும் மக்களை ஓட்டுப் போட வைத்து, உலகத்திலேயே இவர்கள் மட்டும் தான் உன்னதமான உத்தமர்கள் என்பது போல வார வாரம் உலகநாயகன் கமல்ஹாசன் பேசும் பேச்சுக்களை எல்லாம் கேட்டு போட்டியாளர்களுக்கு ஆர்மி அமைக்கும் ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் நிலையில், இதிலாவது நல்ல நபர்களை போட்டியாளர்களாக தேர்ந்தெடுங்க என்றும் மீரா மிதுன், விக்ரமன் போன்ற ஆட்கள் வேண்டாம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
மக்களை முட்டாள் ஆக்காதீங்க: பிக் பாஸ் போட்டியாளர்களை சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து இனியும் மக்களை முட்டாள் ஆக்காதீங்க, டைட்டில் வென்றவர்களே அந்த சீசன் முடிந்ததும் ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய் விடுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியே ஒரு பித்தலாட்டம் என பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களே திடீரென கடுப்பாகி விட்டனர்.
தலைமறைவான மீரா மிதுன்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே சர்ச்சை பிரபலமாக வலம் வந்த மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இயக்குநர் சேரன் தனது இடுப்பை பிடித்து விட்டார் என பிரச்சனை செய்து பரபரப்பை கிளப்பினார்.

பிக் பாஸ் பிரபலமாக வலம் வந்த மீரா மிதுன் வெளியே வந்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி படு ஆபாசமாக ட்வீட்களை போட்டு சிக்கலில் சிக்கினார். கடைசியில் பட்டியலினத்தவர் பற்றி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் ஜாமீனில் வெளிவந்த நிலையில், எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இத்தனை ஆண்டுகள் தலைமறைவாகவே உள்ளார்.
பெண்கள் மேட்டரில் சிக்கிய விக்ரமன்: ஆரி அர்ஜுனனை காப்பியடித்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று விடலாம் என கனவு கண்ட விக்ரமன் அறம் வெல்லும் என பேசி வந்த நிலையில், கடைசியில் அசீம் டைட்டிலை வென்று விட்டார்.

இந்நிலையில், பெண்கள் மேட்டரில் சிக்கி பெரும் சர்ச்சை வலையில் தற்போது விக்ரமன் வசமாக மாட்டி உள்ளது பிக் பாஸ் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல போட்டியாளர்களை தேர்வு செய்யுங்க என்றும் டிஆர்பிக்காக கிரைம் ரேட் போட்டியாளர்களை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் முன்னிறுத்தி வருகின்றனர்.
தயங்கும் நடிகர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாலே ட்ரோல் பண்றாங்க என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கும் நிலை வருகிறது என சில நடிகர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் வர முடியாது என்று தவிர்த்து வருவதாகவும், ஒரு சில நடிகர்கள் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் கிடைக்கும் மக்கள் வெளிச்சத்தை சரியாக பயன்படுத்தி ஸ்டார் ஆகி வருகின்றனர் என்றும் ஆதரவு கருத்துக்களும் குவிகிறது.


Click it and Unblock the Notifications











