twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யை அடுத்து விஜய் ஆண்டனியை பாடாய் படுத்திய 'ஜிஎஸ்டி'

    By Siva
    |

    ஹைதராபாத்: விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படத்தின் தெலுங்கு பதிப்புக்கு ஜிஎஸ்டியால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் அண்ணாதுரை. இது தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் ரிலீஸாக உள்ளது. படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் தெலுங்கு சென்சார் போர்டில் பிரச்சனையை சந்தித்துள்ளது.

    இந்திரசேனா படத்தில் வரும் ஒரு பாடலால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    பாடல்

    பாடல்

    இந்திரசேனா படத்தில் வரும் ஒரு பாடலில் ஜிஎஸ்டி என்ற வார்த்தையை வைத்துள்ளனர். அவர்கள் ஜிஎஸ்டி பற்றி எந்த கருத்தோ, விமர்சனமோ தெரிவிக்கவில்லை. சும்மா அந்த வார்த்தையை பாடலில் பயன்படுத்தியுள்ளனர்.

    சென்சார் போர்டு

    சென்சார் போர்டு

    பாடலில் ஜிஎஸ்டி என்ற வார்த்தை வந்ததை கேட்ட சென்சார் போர்டு கெட்ட வார்த்தையை கேட்டது போன்று பதறியடித்துள்ளது. அந்த வார்த்தையை முதலில் நீக்கிவிட்டு வாங்க என்று படக்குழுவிடம் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

    விவாதம்

    விவாதம்

    ஜிஎஸ்டி என்ற வார்த்தையை மட்டும் தான் பயன்படுத்தியுள்ளோம். ஜிஎஸ்டியை விமர்சிக்கவில்லை என்று தயாரிப்பாளர் எவ்வளவோ விளக்கியும் சென்சார் போர்டு அதிகாரிகள் கேட்கவே இல்லையாம்.

    மாற்றம்

    மாற்றம்

    தயாரிப்பாளர் ஒரு மணிநேரம் விவாதம் செய்தும் சென்சார் போர்டு மசியவே இல்லையாம். இதையடுத்து ஜிஎஸ்டிக்கு பதில் இஎம்ஐ என்ற வார்த்தையை வைத்துள்ளார்களாம்.

    மெர்சல்

    மெர்சல்

    விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஜிஎஸ்டி வசனத்தால் தமிழ் மற்றும் தெலுங்கு சென்சார் போர்டில் பிரச்சனை வந்தது. அதன் பிறகு தற்போது இந்திரசேனாவுக்கு பிரச்சனை வந்துள்ளது.

    English summary
    Vijay Antony's Annadurai faced issue at the Telugu censor board for using the word GST in one of the songs in the movie. Annadurai is hitting the screens as Indrasena in Telugu on november 30th. It is noted that earlier Vijay's Mersal movie faced issues because of GST dialogue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X