மிக்ஜாம் புயலுக்கு பிறகு ஸ்கூலே இன்னும் திறக்கல.. இந்த ரணகளத்தில் இன்று இத்தனை படங்கள் வெளியாகுதா?

சென்னை: மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில், சில பிரபலங்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். சிலர் சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிலர் புதிய படங்களையே இன்று ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர். அப்படி இன்று தியேட்டரில் என்ன என்ன படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

After Michaung Cyclone 4 big Tamil movies will face the clash today

முத்து: கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், ராதா ரவி, சரத்பாபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான முத்து படத்தை இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்கின்றனர். அடுத்த வாரம் டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு முத்து படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்பிலும் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் 450க்கும் அதிகமான டிக்கெட்டுகள் முதல் காட்சிக்கு புக் ஆகியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஆளவந்தான்: ரஜினி vs கமல் போட்டி இப்போதும் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், ரீ ரிலீஸ் போட்டியும் இன்று களைகட்டி உள்ளது. பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் டபுள் ஆக்‌ஷனில் கலக்கிய ஆளவந்தான் திரைப்படம் இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. கலைப்புலி எஸ். தாணு அந்த படத்தை கமல் பிறந்தநாளுக்கே வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், ஒரு மாதம் கழித்து தற்போது முத்து படத்துடன் மோதுகிறது.

நவரச நாயகனும் களத்தில்: ரஜினி, கமல் மோதும் நேரத்தில் நவரச நாயகன் கார்த்தி தனது புதிய படமான தீ இவன் படத்துடன் களத்தில் குதித்து இருக்கிறார். ஜெயமுருகன் முத்துசாமி தயாரித்து இயக்கி உள்ள இந்த படம் டிசம்பர் 8ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பல ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த படத்தில் கார்த்தி மற்றும் சுகன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கான்ஜூரிங் கண்ணப்பன்: செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, ஆனந்த்ராஜ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள காமெடி பேய் படமான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படமும் இன்று வெளியாகிறது. சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு கிடைத்ததை போல சதீஷின் இந்த பேய் படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X