மைசூரை அடுத்து ஹைதராபாத்திலும் ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ரஜினிகாந்தின் லிங்கா படப்பிடிப்புக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா. ஒரு ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹாவும் மற்றொரு ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
லிங்காவின் முதற்கட்ட படப்பிடிப்பை போன்று தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பின் போதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மைசூர்
லிங்கா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது காவிரி பிரச்சனையில் கன்னடர்களுக்கு எதிராக பேசிய ரஜினியின் படப்பிடிப்பு இங்கு நடக்கக் கூடாது என்று கூறி ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு
மைசூரில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது படக்குழு.

ஹைதராபாத்
படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத் அருகே உள்ள அனஜ்பூர் என்னும் கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ரசாயனம்
படத்திற்காக ரசாயனம் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செட் போட்டுள்ளனர். அந்த ரசாயனங்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலந்துள்ளது.

எதிர்ப்பு
ரசாயனங்கள் நீர்நிலைகளில் கலந்ததை பார்த்த பொதுமக்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினி
பொதுமக்களின் எதிர்ப்பை பார்த்த ரஜினி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு படக்குழுவை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பொது மக்கள் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அனுமதி
லிங்கா படக்குழு முறையான அனுமதி பெற்று தான் அந்த கிராமத்தில் படப்பிடிப்பை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











