மீண்டும் விஜய் படத்தில் இணையும் மனோஜ் பரமஹம்சா... பரபரப்பை கிளப்பும் தளபதி 65

சென்னை : மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. நெல்சல் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டாலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை பற்றிய தகவலை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

After Nanban, will Vijay choose Manoj Paramahamsa, as DoP for his film with Nelson?

பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விடிவி கணேஷ், யோகி பாபு, குக் வித் கோமாளி போட்டியாளர் புகழ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

தளபதி 65 படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். விஜயுடன் 3வது முறையாக அனிருத் பணியாற்ற உள்ளார். கேஜிஎப் படத்தில் பணியாற்றிய அன்பறிவு இரட்டையர்கள் ஸ்டன்ட் அமைக்க உள்ளனர்.

தளபதி 65 படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் மனோஜ் பரமஹம்சா பணியாற்றி உள்ளார்.

சமீபத்தில் அவர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் தளபதி 65 படக்குழு மனோஜ் பரமஹம்சாவை வைத்து சோதனை முயற்சியாக எடுத்த காட்சிகளும், படங்களும் வைரலானது.

பல தகவல்கள் தளபதி 66 பற்றியும் வெளி வந்த வண்ணம் உள்ளன. இளம் டைரக்டர்கள் பலரும் விஜய்க்கு கதை சொல்லியும், விஜய்க்காக கதை தயாரித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X