நயன்தாராவைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவோடு டூயட் பாடப்போகும் ஜெய்...

சென்னை: ராஜாராணி படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நடிகர் ஜெய் 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணனின் அடுத்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என தன் பன்முகத் திறமைகள் மூலம் பிரபலமானவர் ஆண்ட்ரியா. இவர் கௌதம் மேனனின் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது விஸ்வரூபம் -2, உத்தமவில்லன், அரண்மனை மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இது தவிர நடிகர் ஜெய் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படம் இவன் வேற மாதிரியைத் தொடர்ந்து இயக்குநர் சரவணன் இயக்கும் புதிய படமாகும்.

இது தொடர்பாக எங்கேயும், எப்போதும் பட இயக்குநர் சரவணன் கூறியதாவது :-

மாடர்ன் நாயகி...

மாடர்ன் நாயகி...

எனது புதிய படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். நகரத்து கதைக்களத்தில் மிகவும் மாடர்னான பெண்ணாக நடிக்கிறார் ஆண்ட்ரியா.

காதல் பாதி, ஆக்‌ஷன் மீதி...

காதல் பாதி, ஆக்‌ஷன் மீதி...

இப்படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். காதலும், ஆக்‌ஷனும் கலந்த கதைக்களம்.

தவறான தகவல்...

தவறான தகவல்...

இப்படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்க முதலில் நான் அஞ்சலியை அணுகியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.

பழைய படத்தின் தாக்கம்...

பழைய படத்தின் தாக்கம்...

காரணம் ஏற்கனவே எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்த ஜெய்-அஞ்சலி ஜோடி பெரிதும் பேசப்பட்டது. எனவே, மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்தால் அப்படத்தின் தாக்கம் இதிலும் தெரியும்.

ஆண்ட்ரியாவுக்கான கதை...

ஆண்ட்ரியாவுக்கான கதை...

அதனை நான் விரும்பவுமில்லை. அதோடு, இப்படத்தின் கதையை தயார் செய்யும் போதே ஆண்ட்ரியாவை மனதில் வைத்துத் தான் தயாரித்தேன்' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X