twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்னுமே இல்லையாம், கடவுள் தான் காப்பாத்தணும் #PrayforNGK

    By Siva
    |

    Recommended Video

    NGK Movie Review | NGK படம் எப்படி இருக்கு மக்கள் கருத்து- வீடியோ

    ஹைதராபாத்: என்.ஜி.கே. படத்தை தெலுங்கில் பார்த்தவர்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. தமிழில் படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் அவரின் நடிப்பை ஆஹோ, ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    மற்றவர்களோ செல்வராகவன் எடுத்த படங்களிலேயே இது தான் மோசமான படம் என்று தெரிவித்துள்ளனர்.

    தேசத்தை கலக்கிய நேசமணி ஞாயிற்று கிழமை உங்க வீடு தேடி வர்றார்! தேசத்தை கலக்கிய நேசமணி ஞாயிற்று கிழமை உங்க வீடு தேடி வர்றார்!

    என்.ஜி.கே.

    என்.ஜி.கே.

    என்.ஜி.கே. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அரசியல் காட்சிகள் எல்லாம் ரொம்பவே செயற்கையாக உள்ளன. நடிகர்களின் நடிப்பும் செயற்கையாக உள்ளது. உயிரே இல்லாத திரைக்கதைக்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்க போராடி தோல்வி அடைந்துள்ளார் சூர்யா என்று விமர்சனம் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தெலுங்கில் என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் விளாசியுள்ளனர்.

    மொக்கை

    மொக்கை

    என்.ஜி.கே. கதை புரியவில்லை, திரைக்கதை புரியவில்லை, என்ன தான் சார் படம் எடுத்து வச்சிருக்கீங்க என்று தெலுங்கு ரசிகர்கள் கேட்கிறார்கள். சூர்யாகாரு படத்தை ரொம்ப எதிர்பார்த்தோமே. இப்படி ஏமாற்றிவிட்டார்களே என்று அக்கட தேசத்தில் புலம்புகிறார்கள். தெலுங்கு விமர்சகர்களோ என்.ஜி.கே.வை கிழித்து தொங்கவிட்டுவிட்டனர். பாவம் சூர்யா, தனது நடிப்பால் படத்தை ஓட வைக்க நினைத்தும் நடக்கவில்லை.

    செல்வராகவன்

    செல்வராகவன்

    செல்வராகவனா இந்த அளவுக்கு மோசமான திரைக்கதையை எழுதியுள்ளார். இல்லை அவரின் திரைக்கதையை மாற்றி எழுத வைத்து கெடுத்துவிட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்.ஜி.கே. ட்ரெய்லரை பார்த்த போதே இது செல்வராகவன் படம் போன்று தெரியவில்லை, ஹரி இயக்கியது மாதிரி இருக்கிறதே என்று விமர்சனம் எழுந்தது. திரைக்குப் பின் நடந்தது கடவுளுக்கே வெளிச்சம்.

    ஸ்க்ரிப்ட்

    ஸ்க்ரிப்ட்

    சூர்யா தனது நடிப்புத் திறமையை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே போகிறார். அதை குறை சொல்வதற்கு இல்லை. ஆனால் நடிப்பில் செலுத்தும் கவனத்தை கதையை தேர்வு செய்வதிலும் செலுத்தினால் நல்லது. இப்படி படம் பார்த்தவர்கள் என்.ஜி.கே.வை விளாசுவது அதன் வசூலை பாதிக்கக்கூடும். மோசமான விமர்சனங்களை பார்த்துவிட்டு தியேட்டருக்கு செல்லும் எண்ணத்தில் இருப்பவர்களும் மனதை மாற்றிக் கொள்வார்கள். இது போதாது என்று தமிழ் ராக்கர்ஸ் வேறு படத்தை கசியவிட்டால் நந்த கோபாலன் குமரனின் நிலை கவலைக்கிடமே. அதன் பிறகு #PrayforNGK என்று தான் ட்வீட் செய்ய வேண்டும்.

    English summary
    NGK has failed to impress Telugu audience. Looks like it is time to pray for NGK.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X