பாட்டி வயசுல நயன்தாரா கமெண்ட்...வலுக்கும் எதிர்ப்பு...மன்னிப்பு கேட்ட டாக்டர்
சென்னை : நயன்தாராவின் வயது மற்றும் திருமணம், குடும்பம் பற்றி மோசமாக கருத்து பதிவிட்ட டாக்டருக்கு சோஷியல் மீடியாவில் எதிர்ப்புக்கள் வலுத்து வருகிறது. இதனால் தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
7 ஆண்டுகள் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பிரபலங்கள் பலர் வாழ்த்து சொல்ல மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு இருந்ததை போலவே திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் பற்றி தினமும் ஏதாவது ஒரு தகவல் வெளியாகி வருவதால் தொடர்ந்து அவர்களின் திருமணம் பற்றி தகவல்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அடுத்து என்ன தகவல் என ரசிகர்கள் பலர் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர்.

வயது வித்தியாசத்தை தேடி ரசிகர்கள்
தற்போது நயன்தாராவிற்கு 37 வயதாகிறது. விக்னேஷ் சிவனை விட நயன்தாரா ஒரு வயது மூத்தவர். இவர்களின் திருமணத்தன்று கூகுளில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வயது வித்தியாசத்தை தான் அதிகம் தேடி உள்ளனர். திருமண போட்டோவை கூட குறைவானவர்கள் தான் தேடி உள்ளனர்.

பாட்டி வயசுல நயன்தாரா
இந்த சமயத்தில் அறிவன்பன் திருவள்ளுவன் என்ற டாக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில், 40 வயதை நெருங்கும் நிலையில் நயன்தாரா தற்போது குடும்பம், குழந்தைகள் குறித்து திட்டமிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. பாட்டி வயசுல என நயன்தாராவை குறிப்பிட்டதுடன் IVF சென்டர்கள் மட்டுமே அவருக்கு உதவ முடியும் என அநாகரீகமாக பதிவிட்டிருந்தார்.

டாக்டரை திட்டி தீர்த்த ரசிகர்கள்
இந்த பதிவை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சின்மயியை தொடர்ந்து நயன்தாரா ரசிகர்கள் உள்ளிட்ட நெட்டிசன்கள் பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். ஒரு டாக்டரே இது போன்று பொது தளத்தில் அநாகரீகராக பதிவிட்டுள்ளது சரியல்ல என தொடர்ந்து எதிர்ப்புக்கள் வலுத்தது.

மன்னிப்பு கேட்ட டாக்டர்
இதனையடுத்து இன்று அந்த டாக்டர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு நயன்தாரா பற்றி பாட்டி வயசுல என எதற்காக குறிப்பிட்டார் என்பதற்கு விளக்கமும் அளித்துள்ளார். இந்த விளக்கம் அறிவியல் ரீதியாக சரியானதாக இருந்தாலும் இதை யாரும் ஏற்க தயாராக இல்லை. தொடர்ந்து அந்த டாக்டரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

சாதாரணமாக தான் சொன்னேன்
அறிவன்பன் தனது இன்றைய பதிவில், நான் சாதாரணமாக யதார்த்தமாக சொன்ன கமெண்ட் யாருடைய மனதையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் கருமுட்டையும் அறிவியல் ரீதியாக 30 வயதிற்கு பிறகு வீக் ஆக ஆரம்பிக்கும்.

நான் ஏன் அப்படி சொன்னேன்னா
எங்களுடைய டாக்டர் நண்பர்கள் பலரும் ஜோதிகா புத்திசாலிதனமாக முடிவெடுத்து திருமணம் முடிந்த 5 ஆண்டுகளுக்குள் குடும்பம், குழந்தை என்று ஆனதை பாராட்டி பேசி உள்ளோம். நானும் நயன்தாராவின் ரசிகன் தான். அதனால் தான் அவர் மீதான அக்கறையில் தாமதமாக திருமணம், குழந்தை பற்றி எடுத்த முடிவு பற்றி கூறினேன். மீண்டும் நயன்தாரா ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

இதுல ஜோதிகாவை ஏன் இழுக்குற
இவரது மன்னிப்பை ஏற்காத நெட்டிசன்கள், நயன்தாரா பற்றி பேசியதே தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதில் எதற்காக தேவையே இல்லாமல் ஜோதிகாவை இழுக்கிறீர்கள். திருமணம், குழந்தை என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். வயதை ஒரு தடையாக அவர்களே நினைக்கவில்லை. உங்களுக்கு என்ன வந்தது. நீங்கள் டாக்டர் என்றால் உங்களிடம் ஆலோசனை பெற வருபவர்களுக்கு மட்டும் சொல்லுங்கள் தேவையில்லாமல் பிரபலங்களை பற்றி பேசி தரம் தாழ்ந்த பப்ளிசிட்டி தேடிக் கொள்ளாதீர்கள் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











