ஓப்பன் நாமினேஷன் நடத்தி அனைவரையும் நாமினேட் செய்த பிக்பாஸ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 85 நாட்களை கடந்துள்ளது. இரண்டு வைல்ட் கார்டு என்ட்ரியுடன் சேர்த்து தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.

இதுவரை 12 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டு அக்ஷரா மற்றும் வருண் நேற்று வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஓப்பன் நாமினேஷன்

ஓப்பன் நாமினேஷன்

இந்நிலையில் நிகழ்ச்சியின் 85 வது நாளான இன்று போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டு, ஓப்பன் நாமினேஷன் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. பெடஸ்டலில் திறக்க கூடாது என சொல்லி கார்டு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

பாவனியை நாமினேட் செய்த அமீர்

பாவனியை நாமினேட் செய்த அமீர்

இதில் முதலில் பேசிய நிரூப், சிபி மற்றும் ராஜுவை நாமினேட் செய்தார். பாவனி, நிரூப் மற்றும் தாமரையை நாமினேட் செய்தார். அமீர், தன்னுடன் வந்தவர் என்பதால் சஞ்சீவை நாமினேட் செய்து, துவக்கத்தில் இருந்தே போட்டியில் இருப்பவர்கள் தான் போட்டியில் இருக்க வேண்டும் என்பதால் சஞ்சீவை நாமினேட் செய்வதாக கூறினார். அதே போல் பாவனியால் தன்னுடைய ஃபோக்கஸ் போய் விட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதனால் பாவனியை நாமினேட் செய்கிறேன் என்றார் அமீர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

சஞ்சீவிற்கு பிரியங்கா சொன்ன காரணம்

சஞ்சீவிற்கு பிரியங்கா சொன்ன காரணம்

ராஜு, நிரூப் மற்றும் பாவனியை நாமினேட் செய்தார். பிரியங்கா, சஞ்சீவ் மற்றும் நிரூப்பை நாமினேட் செய்தார். சஞ்சீவ் இதுவரை நாமினேஷனுக்கு சென்றதில்லை. அதனால் அவர் நாமினேஷனிற்கு சென்றால் எப்படி இருக்கும் என பார்க்க நினைக்கிறேன். அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார். நிரூப் தன்னை திட்டியது பிடிக்கவில்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார்.

பிரியங்காவை நாமினேட் செய்ய காரணம்

பிரியங்காவை நாமினேட் செய்ய காரணம்

சிபி, நிரூப் மற்றும் அமீரை நாமினேட் செய்தார். தாமரை, யாரை நாமினேட் செய்வதென தெரியவில்லை என கூறி பாவனி மற்றம் நிரூப்பை நாமினேட் செய்தார். நிரூப், பிரியங்காவை திட்டியது பிடிக்கவில்லை என காரணம் சொன்னார். சஞ்சீவ், நான் உங்களை நினைக்கவேயில்லை. ஆனால் ஒருவர் நாமினேஷனின் போல் எப்படி இருக்கும் என சொல்லியதால் பிரியங்காவை நாமினேட் செய்கிறேன். என்னுடன் வந்தவர் என்பதால் போட்டியாக நினைத்து அமீரை நாமினேட் செய்கிறேன் என்றார்.

Recommended Video

Pavani பிரச்சினை பற்றி Abhinay மனைவி என்ன சொன்னாங்க தெரியுமா?? | Bigg Boss Tamil, Abhinay Pavani
அனைவரும் நாமினேடட்

அனைவரும் நாமினேடட்

ஓப்பன் நாமினேஷன் முடிந்ததும் பேசிய பிக்பாஸ், இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. ஃபினாலே ரேசிற்கான முக்கியமான வாரம் இது. இன்னும் 21 நாட்களே உள்ளது. அதனால் இனி வரும் டாஸ்க்குகள், அதில் உங்களுக்காக விளையாடி உங்கள் வெற்றியை உறுதி செய்து கொள்வது முக்கியம் என சொல்லி, ராஜுவிடம் அந்த கார்டை படிக்க சொல்கிறார். அதில் அனைவரும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்படுகிறீர்கள் என எழுதப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X