விஜய் சேதுபதியை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்.. ரவி மோகனுக்கு பிரபலம் செய்த அட்வைஸ்

சென்னை: நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த பத்தாம் தேதி ரிலீஸான படத்தை பார்த்துவிட்டு; ரவியின் வில்லத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. வருங்காலங்களில் கண்டிப்பாக அவருக்கு வில்லன் வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அட்வைஸ் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். பெரிதாக எந்த சர்ச்சைகள், விமர்சனங்களிலும் சிக்காத அவர்; சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆர்த்தியை பிரிந்துவிட்டு கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதால் சமீப காலமாக அவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் அவர் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

கரியரில் கவனம்: அவர் தனது கரியரில் முழுக்க முழுக்க கவனத்தை செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் கடைசியாக காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் சுமார் ஹிட்தான். அடுத்ததாக கராத்தே பாபு, ஜீனி உள்ளிட்ட படங்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் வெளியாவது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்துவந்த அவர்; சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

After Parasakthi Success Anthanan Advises Ravi Mohan to Follow Vijay Sethupathi Path
Photo Credit:

சூப்பர் ரெஸ்பான்ஸ்: அப்படத்தில் திருநாடன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். படமானது கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. படத்துக்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேசமயம் சிவகார்த்திகேயன் எப்படி பெரிய பெயரை பெற்றாரோ; அதேபோல் பராசக்தி படத்தின் மூலம் ரவி மோகனுக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அவர் திரையில் வரும் ஒவ்வொரு சீனுக்கும் ரசிகர்களிடமிருந்து கைத்தட்டல்கள் விண்ணை பிளக்கின்றன.

தொடர்வாரா ரவி மோகன்: இந்த ரெஸ்பான்ஸை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார் என்பதுதான் உண்மை. அவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கையில் கண்டிப்பாக தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் அவரை வில்லனாக நடிக்க வைக்க ஏகப்பட்ட அழைப்புகள் வரும் என்றே தெரிகிறது. அதை ஏற்றுக்கொண்டு வில்லனாக பயணப்படுவாரா ரவி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரவிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

அந்தணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விஜய் சேதுபதி பல தோல்விகளுக்கு பிறகும் நின்றதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் அவர் வில்லனாக நடித்ததுதான். அதற்கு பிறகு இந்தியா முழுவதும் பல மொழி படங்களில் நடித்தார். ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அவர் இருந்திருந்தால் இந்நேரத்துக்கு அவர் காணாமல் போயிருப்பார். அன்று அவர் துணிச்சலாக எடுத்த முடிவுதான் அவரை இன்று காப்பாற்றுகிறது. எனவே விஜய் சேதுபதியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு ரவி மோகன் நடிக்க வேண்டும். வேற்று மொழிகளில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்தால் அதையெல்லாம் அவர் செய்யலாம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X