ஸொமேட்டோ விவகாரம்.. பரிணீத்தி சோப்ராவை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலமும் காமராஜுக்கு ஆதரவு!
மும்பை: தனது மூக்கில் ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் குத்தியதாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஹிதேஷா சந்திரனி ரத்தம் சொட்ட சொட்ட போட்ட வீடியோ வைரலான நிலையில், காமராஜ் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
வேலை இழந்து, சிறைக்கு சென்று, ஜாமினில் வெளிவந்த காமராஜ் தனது தரப்பு நியாயத்தை எடுத்து கூறிய நிலையில், பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை பரிணீத்தி சோப்ராவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 14 பிரபலமான ராக்கி சாவந்த் காமராஜுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஸொமேட்டோ விவகாரம்
கடந்த மார்ச் 9ம் தேதி பெங்களூருவில் வசிக்கும் ஹிதேஷா சந்திரனி ஸொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவு தாமதமாக வந்ததால், டெலிவரி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். டெலிவரி ஊழியர் தனது மூக்கை உடைத்து விட்டார் என ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்ட அவருக்கு ஆதரவாக பலரும் திரண்டனர்.

கண்ணீர் விட்ட காமராஜ்
ஹிதேஷா கொடுத்த புகாரை தொடர்ந்து ஸொமேட்டோ நிறுவனம் அவரது பார்ட்னர்ஷிப்பை ரத்து செய்தது. கர்நாடக போலீசார் காமராஜை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த காமராஜ் கண்ணீர் விட்டு கதறியபடி நான் அவரது மூக்கை உடைக்கவில்லை. பதிலுக்கு அவர் தான் தன்னை அடிமை என்றும், செருப்பை வீசி அடித்ததாகவும் கூறினார்.

பரிணீத்தி சோப்ரா ஆதரவு
பிரபல பாலிவுட் நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணீத்தி சோப்ரா, இந்த விவகாரத்தில் ஹிதேஷா பொய் சொல்கிறார் என்றும் காமராஜ் நிரபராதி என்பது போல தெரிகிறது. போலீசார், அந்த பெண்ணிடமும் உரிய விசாரணையை நடத்தி உண்மையான குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்படும் அப்பாவி ஆண்கள்
பெண்கள் எனும் கேடயத்தை பயன்படுத்திக் கொண்டு பல பெண்கள் இதுபோல பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஏகப்பட்ட அப்பாவி ஆண்களை பலிகடா ஆக்கி வருகின்றனர் என #Men Too என்கிற ஹாஷ்டேக்கையே நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர். பொய்யான குற்றச்சாட்டால் தான் காமராஜ் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ஆதரவு பெருகியது.

தலைமறைவு
சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகிய நிலையில், காமராஜும் ஹிதேஷா மீது புகார் கொடுத்தார். ஆனால், பெங்களூருவை விட்டு ஹிதேஷா மகாராஷ்ட்ராவுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், பாதுகாப்பு கருதி உறவினர் வீட்டில் தங்கி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் ஹிதேஷாவை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

பிக் பாஸ் பிரபலம்
இந்நிலையில், நடிகை பரிணீத்தி சோப்ராவை தொடர்ந்து பிக் பாஸ் 14வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ராக்கி சாவந்த்தும் ஸொமேட்டோ ஊழியர் காமராஜுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் போலீசார் பாரபட்சம் பார்க்காமல் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தண்ணீர் கொடுங்க
மேலும், கொரோனா காலத்திலும் மக்களுக்காக சுயநலமின்றி உழைத்தவர்கள் டெலிவர் ஊழியர்கள். கொஞ்சம் லேட் ஆவதால், அவர்களிடம் கோபத்தை காட்டாமல், கடுமையான போக்குவரத்து நெரிசலில் நமக்காக போராடி வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் ராக்கி சாவந்த் கூறியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











