600 கோடி வசூல்.. அபார வெற்றி பெற்ற பதான்.. தூம் 4ல் நடிக்கப் போறாரா ஷாருக்கான்?

மும்பை : நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் கடந்த மாதத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்து வருகிறது பதான் படம்.

இந்தப் படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாகியுள்ளார் தீபிகா படுகோனே. 4 ஆண்டுகள் கழித்து ஷாருக்கின் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இந்தப் படத்தையடுத்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஷாருக்கான். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜவான் படம் ரிலீசாகவுள்ளது.

நடிகர் ஷாருக்கானின் பதான் படம்

நடிகர் ஷாருக்கானின் பதான் படம்

நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தப் படம் ஷாருக்கின் நடிப்பில் 4 ஆண்டுகள் கழித்து வெளியானதால் முன்னதாக இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

ஒரு வாரத்தில் ரூ.600 கோடி வசூல்

ஒரு வாரத்தில் ரூ.600 கோடி வசூல்

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்தப் படம் பூர்த்தி செய்ய தவறவில்லை. கடந்த ஒரு வாரத்திலேயே இந்தப் படத்தின் வசூல் 600 கோடிகளை கடந்து ரசிகர்களுக்கும் மற்ற நடிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. வீழ்ச்சியில் இருந்து பாலிவுட் படவுலகத்தை இந்தப்படம் மீட்டுள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பாகுபலி 2 -8 நாள் வசூல் முறியடிப்பு?

பாகுபலி 2 -8 நாள் வசூல் முறியடிப்பு?

ஷாருக்கிற்கு இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் தீபிகா படுகோனே. படத்தின் ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்களும் தங்களது நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். இந்தப் படம் கடந்த 8 நாட்களில் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான வசூலை கொடுத்துள்ளது. இந்திய அளவில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

8 நாட்களில் ரூ.337 கோடி வசூல்

8 நாட்களில் ரூ.337 கோடி வசூல்


பதான் மற்றும் பாகுபலி 2 படங்களின் முதல் 8 நாட்களின் வசூலை கணக்கிடும்போது பதான் கடந்த 8 நாட்களில் 337 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதேபோல பாகுபலி 2 படத்தின் முதல் 8 நாட்கள் வசூல் 227 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் பதான் படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

சினிமா ட்ராக்டர்கள் கருத்து

சினிமா ட்ராக்டர்கள் கருத்து

இதனிடையே பாகுபலி படம் சர்வதேச அளவில் 1400 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில், அந்த லாபத்தை பதான் முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பாகுபலி 2 படத்தின் இந்தி வசூலான 510 கோடி ரூபாயை பதான் முறியடிக்கும் என்றும் சினிமா ட்ராக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூம் 4 படத்தில் ஷாருக்கான் கையெழுத்து?

தூம் 4 படத்தில் ஷாருக்கான் கையெழுத்து?

இந்நிலையில் பதான் படம் ஷாருக்கின் கேரியரை மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஜவான் படமும் இன்னும் இரு மாதங்களில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக யாஷ்ராஜ் பிலிம்ஸ், ஷாருக்குடன் தூம் படத்திற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டில் தூம் 4 துவக்கம்?

அடுத்த ஆண்டில் தூம் 4 துவக்கம்?

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். அவரது அடுத்தடுத்த படங்களை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவரது கேரியர் பெஸ்ட் படங்களான தூம் படத்தின் 4வது பாகம் குறித்த அறிவிப்பு அவர்களுக்கு இனிப்பானதாகவே அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X