பீட்சா சாப்டுட்டு 'ஜில் ஜில்' ஜிகர்தண்டா குடிங்க!

By Mayura Akilan

சுடச் சுட பீட்சா கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், தமிழ் ரசிகர்களுக்கு அடுத்த படமாக ஜில்லான ஜிகர்தண்டாவை கொடுக்க உள்ளார். இதற்கான கதை திரைக்கதை ரெடியாகிவிட்டதால் சூட்டிங்கிற்கு தயாராகிவிட்டனர்.

மதுரையில் குளிர்பானமான ஜிகர்தண்டா பிரபலம். வெளியூர்காரர்கள் வந்தாலே ஜிகர்தண்டாவை குடிக்காமல் போகமாட்டார்கள். மதுரையை கதைக் களமாக எடுத்துள்ள கார்த்திக் சுப்புராஜ் ஜில்லான ஜிகர்தண்டாவை படத்தின் பெயராக வைத்துள்ளார்.

திரில், பேய் என பீட்சாவில் அலறிய ரசிகர்கள் ஜில்லான ஜிகர்தண்டாவை குடிக்கலாம் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒரே படத்தில் பாராட்டு

ஒரே படத்தில் பாராட்டு

'பீட்சா' படத்தின் மூலம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடம் ஒருசேர பாராட்டை அள்ளியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தனது அடுத்த படத்திற்கான கதை, திரைக்கதையை ரெடி செய்து மதுரையில் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்.

வெற்றிமாறன் துவக்கம்

வெற்றிமாறன் துவக்கம்

படப்பிடிப்பினை இயக்குனர் வெற்றிமாறன் மதுரையில் துவக்கி வைத்தார். 'பீட்சா' நாயகன் விஜய் சேதுபதி நேராக படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கே சென்று படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தாராம்.

'ஜிகர்தண்டா'

'ஜிகர்தண்டா'

பீட்சா என்று இத்தாலிய உணவின் பெயரை முதல்படத்திற்கு சூட்டிய கார்த்திக் சுப்புராஜ், மதுரையின் பிரபல சுவையான குளிர்பானமான ஜிகர்தண்டாவை அடுத்த படத்திற்கு சூட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மதுரையில் 2 மாதம்

மதுரையில் 2 மாதம்

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. அதன்பின்னர் சென்னையில் மீதமுள்ள காட்சிகள் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

சித்தார்த் – லட்சுமி மேனன்

சித்தார்த் – லட்சுமி மேனன்

சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா, கருணா, குரு சோமசுந்தர், பிரதாப் போத்தன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தினை 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கதிரேசன் தயாரிக்க இருக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X