மோடியை தொடர்ந்து 'மேன் vs வைல்டில்' ரஜினி.. விரைவில் டிஸ்கவரியில்.. மைசூர் போனதன் காரணம் இதானாம்!

Recommended Video

மோடியின் பாதையில் ரஜினி | Rajinikanth With Bear Grylls

சென்னை: பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் பேர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் அண்மையில் தர்பார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் ரசிகர்கள் அதனை கொண்டாடினர். தர்பார் படம் வசூலையும் குவித்து சாதனை படைத்தது.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

இதனை தொடர்ந்து தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகைகள் குஷ்புவும் மீனாவும் நடிக்கின்றனர். ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இசையமைப்பாளர் டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

தலைவர் 168 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் நடிகர் ரஜினிகாந்த்.

விமானம் தாமதம்

விமானம் தாமதம்

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து திடீரென மைசூருக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் அவரது இளையமகள் சவுந்தர்யாவும் சென்றார். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானம் புறப்பட இரண்டு மணி நேரம் தாமதமானது. இதன்காரணமாக அதுவரை விமானத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.

மேன் வெர்சஸ் வைல்டு

மேன் வெர்சஸ் வைல்டு

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மைசூர் சென்றது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூரா வனப்பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் காட்சியாக்கப்படுகிறது.

சுவாரசிய தகவல்கள்

சுவாரசிய தகவல்கள்

இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் 2 நாட்கள் வனப்பகுதியிலேயே தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பல சுவாரசியமான தகவல்களையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி பேர் கிரில்ஸுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோக்கள் வைரலாகவும் பரவியது. இந்நிலையில் ரஜினியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை காண ரசிகர்கள் இப்போதே ஆர்வமாகிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X