ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த வந்தியத்தேவன் வந்துட்டார்...பொன்னியின் செல்வன் கார்த்தி போஸ்டர் இதோ
சென்னை : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி உள்ளது பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Recommended Video
இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் ஜுலை முதல் வாரத்தில் வெளியாகும், தஞ்சையில் டீசர் ரிலீஸ் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசர் ரிலீஸ் தள்ளி போவதாக மற்றொரு தகவலும் பரவியது.

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்
இதற்கிடையில் சமீபத்தில், வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. போர்க்களத்தில் சோழர்களின் கொடி பட்டொளி வீசி பறப்பதை போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு, சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் மோஷன் போஸ்டரும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. இதனால் இந்த வாரம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாக போகிறதா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். ஆனால் அது போன்ற எந்த அறிவிப்பும் மோஷன் போஸ்டரில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், படத்தின் ரிலீஸ் தேதி மட்டுமே இடம்பெற்றிருந்தது.

அசத்தலாக வந்த ஆதித்ய கரிகாலன்
இந்நிலையில் நேற்று, படத்தில் விக்ரம் நடிக்கும் ஆதித்ய சோழன் கேரக்டரின் மாஸான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சோழ பட்டத்து இளவரசன்...மாபெரும் போர்வீரன்...காட்டுப்புலி...ஆதித்ய கரிகாலன் என்ற கேப்ஷனுடன் போர்ப்படைகள் சூழ குதிரை மீது அமர்ந்து வரும் விக்ரமின் போஸ்டரை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிட்டுள்ளன

வந்து விட்டான் வந்தியத் தேவன்
விக்ரமின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டரை எப்போ வெளியிடுவீங்க என ஆர்வமாக கேட்டனர். ரசிகர்கள் பல நாட்களாக ஆர்வமாக கேட்டு வந்த வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ள கார்த்தியின் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ராஜ்யம் இல்லா இளவரசன்..உளவாளி..கைதேர்ந்த சாகசக்காரன்...இதோ வந்துவிட்டான் வந்தியத்தேவன் என்ற கேப்ஷனுடன் கார்த்தியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தி கம்பீரமாக குதிரை மீது போஸ் கொடுக்கும் போஸ்டருக்கு லைக்குகள் குவிகிறது.

நாளை யாருடைய போஸ்டர்
தஞ்சையில் நடக்கும் என சொல்லப்பட்டு வந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடத்தப்பட உள்ளதாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தினம் ஒரு கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ஆர்வத்தை துண்டி வருகிறது. நாளை பொன்னியின் செல்வன் ரோலில் நடிக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் இப்போதே யூகித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











