3 மொழியில் உருவாகும் போர் பற்றிய படம்.. துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் 2 ஹீரோயின்கள்!
சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் போர் பற்றிய கதையில், இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
தமிழில், இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானவர், இந்தி நடிகை ராஷி கண்ணா.
அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களில் நடித்தார்.

சொர்க்க டோலிவுட்
இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷி, அங்கிருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். மும்பை ஹீரோயின்களின் சொர்க்கமாக இருக்கும் டோலிவுட், ராஷி கண்ணாவையும் கொண்டாடியது. அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார்
கடைசியாக, விஜய தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது, தமிழில், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அதிதி ராவ் ஹைதாரி விலகியதால், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும் இணைந்தார்.

வில்லேஜ் லுக்
லாக்டவுனில் தமிழ்க் கற்று வந்த நடிகை ராஷி கண்ணாவுக்கு இப்போது கொஞ்சம் பேசத் தெரியும். இன்ஸ்டாவில் கிளாமர் ஸ்டில்களை அடிக்கடி பதிவிடும் நடிகை ராஷி கண்ணா, கடந்த சில நாட்களுக்கு முன், பாவாடை, தாவணியில் வில்லேஜ் லுக் ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார். அது வைரலானது.
Recommended Video

ஏற்கனவே பூஜா
அவர் இப்போது துல்கர் சல்மான் ஜோடியாக மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை ஹனு ராஹ்வபுடி இயக்குகிறார். இதில் ஏற்கனவே ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக, ராஷி கண்ணா இணைந்திருக்கிறார்.

போர் பற்றிய கதை
இதன் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 1960- களில் நடக்கும் படமான இது, போர் பற்றிய கதையை கொண்டது எனத் தெரிகிறது. இதில், ராம் என்ற ராணுவ வீரராக துல்கர் நடிக்கிறார். காஷ்மீரில் கதை நடக்கிறது.


Click it and Unblock the Notifications











