10 நாட்கள் சூறாவளியாய் பிரமோஷனல் டூர்.. ரிலீசையொட்டி சென்னை திரும்பிய பொன்னியின் செல்வன் டீம்!
சென்னை : நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ரசிகர்களின் காத்திருப்பு முடியப் போகிறது. இந்த பிரம்மாண்ட படைப்பை திரையில் சென்று கண்டுகளிக்கும் நேரம் வந்துவிட்டது.
படத்திற்கான எதிர்பார்ப்பு அதன் புக்கிங்குகளில் தெரிந்துள்ளது. புக்கிங்குகள் ஓபன் செய்த இடங்களில் எல்லாம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் கூட்டணியில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இன்னும் ஒரே நாளில் படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.

மணிரத்னத்தின் தயாரிப்பு
மணிரத்னத்தில் கனவு பிராஜக்டான இந்தப் படத்தை அவர் வெறுமனே 155 நாட்களில் இயக்கி முடித்துள்ளார். ஆனால் சிஜி வொர்க்குகள் உள்ளிட்டவற்றால் படம் ரிலீசுக்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டது. லைகாவுடன் இணைந்து மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீசுக்காக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பு
இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்ததுடன் பிரம்மாண்டமான பிரமோஷனையும் மணிரத்னம் கொடுத்துள்ளார். படத்தின் டீசர், பாடல்களை பிரம்மாண்டமான நிகழ்ச்சியுடன் கொடுத்த அவர், தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டையும் பிரம்மாண்டமாக்கினார்.

தமிழின் ஜாம்பவான்கள்
தமிழின் இரண்டு ஜாம்பவான்களை இந்த இசை வெளியீட்டிற்காக களமிறக்கினார். பொன்னியின் செல்வன் படம் குறித்த அனுபவங்களை பகிர வைத்தார். இந்த இசை வெளியீடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

பிரமோஷனல் டூர்
மேலும் படத்தின் நடிகர், நடிகைகள் இந்தப் படத்திற்காக பிரமோஷனல் டூரிலும் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த டூரின் ஒருகட்ட பிரமோஷன் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி என நீண்டது.

சென்னை திரும்பிய நடிகர்கள்
மும்பையில் நடைபெற்ற இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதனிடையே மும்பையை தொடர்ந்து டெல்லியிலும் பிரமோஷனை முடித்துள்ளது.நாளை மறுதினம் படத்தின் ரிலீஸ் நடக்கவுள்ள நிலையில் தங்களது 10 நாட்கள் பிரமோஷனல் டூரை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இடையில் ஒரு நாள்
நாளை மறுதினம் படத்தின் ரிலீஸ் நடைபெறவுள்ள நிலையில், இங்கு தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்கவும் படத்தின் நடிகர், நடிகைகள் திட்டமிட்டுள்ளனர். ரசிகர்களுடன் ரசிகர்களாக இவர்கள் படத்தை இணைந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











