அது ஆலியா பட் இல்லை.. பாலிவுட் ஹீரோ ராஜ்குமார் ராவ் தான்.. நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்!

மும்பை: பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், தனது அடுத்த படமான லூடோவிற்காக முற்றிலுமாக பெண் வேடமிட்டு ஆளே மாறியுள்ளார்.

ராஜ்குமார் ராவ் 2020 புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஆலியா பட்டுக்கு என்ன ஆச்சு என பதறி போயுள்ளனர்.

அதன் பின்னர், அது ஆலியா பட் அல்ல ராஜ்குமார் ராவ் தான் என்பது தெரியவர, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதி எஃபெக்ட்

விஜய்சேதுபதி எஃபெக்ட்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கை வேடமிட்டு கலக்கியிருந்தார். பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆலியா பட், உள்ளிட்ட பலரும் அவரது பெண் வேடத்தை அண்மையில் நடந்த ஃபிலிம் கம்பெனியின் ரவுண்ட் டேபிள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெகுவாக பாராட்டினார்கள். பாலிவுட் முழுக்க விஜய்சேதுபதியின் புகழ் பரவியுள்ள நிலையில், ராஜ்குமார் ராவின் இந்த பெண் வேட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விஜய்சேதுபதி எஃபெக்ட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

செம்ம டேலன்ட்

செம்ம டேலன்ட்

பாலிவுட்டின் மிக திறமையான நடிகர்களில் ராஜ்குமார் ராவும் முக்கியமானவர். அவர் நடிப்பில் வெளியான குயின், நியூட்டன், கை போச்சே, டி டே, ராப்டா, சிட்டி லைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளன.

324 வயசு

2017ம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான ராப்டா படத்தில் 324 வயது கேரக்டரில் அடையாளமே தெரியாமல் நடித்திருந்தார் ராஜ்குமார் ராவ். தற்போது லூடோ படத்திற்காக டோட்டலாக சேஞ்ச் ஆகியுள்ளார்.

நியூ இயர் கிஃப்ட்

2020ம் ஆண்டு புத்தாண்டுக்கு தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு கிஃப்டாக லூடோ படத்தின் பெண் லுக்கை ராஜ்குமார் ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அச்சு அசல் ஆலியா பட்

ராஜ்குமார் ராவின் லேடி கெட்டப் அச்சு அசல் ஆலியா பட் போலவே இருப்பதாகவும், என்னவொன்று உயரம் தான் சற்று அதிகம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ராஜ்குமார் ராவின் இந்த சேஞ்ச் ஓவரை அவரது ரசிகர்கள் வாய் பிளந்து பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X