பா.ஜ.க.,வில் ராதாரவி.. சின்மயி காட்டம்.. செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி?
சென்னை: நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி, தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார்.
ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்த நிலையில், மேடைகளில் பெண்களை அவமதிக்கும் விதமாகவும் ஆபாசமகாவும் ராதாரவி பேசி வருகிறார் என்றும், அவர் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுக்கி ஸ்மிரிதி இரானியிடம் இவரை ஏன் பா.ஜ.க.,வில் சேர்த்துள்ளீர்கள் என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீடு விவகாரத்தில் இருந்தே ராதாரவியை விமர்சித்து வரும் சின்மயி, தற்போது ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்துள்ள நிலையில், மீண்டும் விமர்சித்துள்ளார்.
சின்மயி கேள்வி
நடிகர் ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்துள்ள நிலையில், பா.ஜ.க., மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை டேக் செய்து, ராதாரவி, தமிழ் நாட்டில் உள்ள உங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் பொதுவாக மேடைகளை பயன்படுத்திக் கொண்டு பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வருபவர் மேலும், டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி, பாலியல் அத்துமீறல் கூறி வரும் நபர்களை யூனியனில் இருந்து விலக்கியுள்ளார் என சின்மயி காட்டமாக ட்வீட் செய்துள்ளார். சின்மயியின் இந்த ட்வீட்டுக்கு செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மீடூ சர்ச்சை
பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் சின்மயி. ஆனால், அது குறித்து திரைத்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதற்கு பதிலாக தன்னைத் தான் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் சின்மயி குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்மிரிதி இரானி கவனிப்பாங்களா
சின்மயி மேடம் இந்த விசயத்தை ஸ்மிரிதி இரானி கவனிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா, பப்ளிக் ஸ்டேஜ்ல பிரபல நடிகை குறித்து அவதூறாக பேசிய அவரை பா.ஜ.க., சேர்த்திருக்கக்கூடாது என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
அப்பா பேர்ல காலத்தை ஓட்டுறார்
உண்மை தான் சின்மயி மேடம், கட்சியில் இணைப்பதற்கு முன்பு அந்த நபர் பின்னணி குறித்து பா.ஜ.க., விசாரணை செய்ய வேண்டும். பெண்கள் குறித்து இழிவாக பேசி வரும் இவர் பா.ஜ.க.,வில் இணைந்தால் நிச்சயம் பெண்கள் ஓட்டுக்கள் குறையும், ராதாரவி அவங்க அப்பா சேர்த்து வைத்த பேர்ல காலத்தை ஓட்டி வருகிறார் என இந்த நெட்டிசன் சின்மயிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











