அன்று ரஜினி...இன்று மோகன்லால்... வைரலாகும் மோகன்பாபு ஃபேமிலி ஃபோட்டோஸ்
ஐதராபாத் : சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தெலுங்கு மெகா ஸ்டார் மோகன்பாபு நடத்திய ஃபோட்டோஷுட் செம வைரலானது. இரு ஸ்டார்களுடன் இணைந்து மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை வெளியிட்டார்.
எதற்காக இந்த ஃபோட்டோஷுட் என விசாரித்த போது, மோகன்பாபுவும் ரஜினியும் ஒன்றாக சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவர்கள். அப்போதிருந்து இப்போது வரை இருவரின் நட்பும் தொடர்கிறது. ரஜினி ஐதராபாத் வரும் போதெல்லாம் மோகன்பாபுவை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பல நண்பர்களுடன் இருவரும் ஒன்றாக இணைந்த போது இந்த ஃபோட்டோஷுட் நடத்தப்பட்டதாக லட்சுமி மஞ்சு நீண்ட விளக்கம் அளித்திருந்தார். இருவருடனும் இணைந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டது மறக்க முடியாத அனுபவம் என கூறி இருந்தார்.

மோகன்லால் - மோகன்பாபு சந்திப்பு
இந்நிலையில் தற்போது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும், மோகன்பாபுவும் சந்தித்து போது எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது எதற்காக என கேட்ட போது, இதுவும் நட்பு ரீதியிலானது என கூறி உள்ளனர்.

மீண்டும் மீனாவுடன் ஜோடி
மோகன்லால் தற்போது ப்ருத்விராஜ் இயக்கும் இரண்டாவது படமான Bro Daddy படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவே நடிக்கிறார். த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஜோடி இணையும் படம் இது. இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

மோகன்பாபு கொடுத்த விருந்து
இந்நிலையில் மோகன்லால் மற்றும் மீனாவை தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார் மோகன்பாபு. இந்த ஃபோட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, மெகா எம் நடிகர்களின் இரவு விருந்து என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோஸ்
இந்த விருந்து ஃபோட்டோக்களை மீனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மோகன்பாபு மற்றும் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் மீனா பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஐதராபாத்தில் ஷுட்டிங்
Bro Daddy படத்தின் ஷுட்டிங் ஜுலை 15 ம் தேதி ஐதராபாத்தில் துவங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மோகன்லால், மீனாவுடன் இணைந்து ப்ருத்விராஜும் நடிக்கிறார். இவர்களுடன் கல்யாணி பிரியதர்ஷினி, மீ கனிகா, லாலு அலெக்ஸ், சோபியன் ஷாகிர் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.

சென்டிமென்ட் படமா
படத்தின் தலைப்பே சொல்கிறது படத்தின் கதையை. இதுவும் ஒரு சென்டிமென்ட் படம் தானாம். அப்பாவின் பாசத்தை சொல்லும் படம். ஏற்கனவே மோகன்லால், மீனா இணைந்து நடித்த த்ரிஷ்யம் படமும் பாசக்கார அப்பாவை பற்றிய கதை தான். ஆனால் இது தந்தை - மகள் இடையேயான பாசத்தை சொல்லும் கதை என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











