இது சர்கார் கிளைமாக்ஸ் ப்பா.. ரஜினி ஒண்ணும் புதுசா யோசிக்கலை.. வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: இன்னைக்காவது அரசியல் பிரவேசம் குறித்து உருப்படியா ஒரு அறிவிப்பை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு சர்கார் படத்தின் கிளைமேக்ஸ் கதையை சொல்லிவிட்டு போயிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Rajinikanth press meet| Full Speech|ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு... முழு வீடியோ

கடந்த 2017ம் ஆண்டு சிஸ்டம் சரியில்லை; ஆன்மிக அரசியல் என பரபரப்பை கிளப்பிய நடிகர் ரஜினிகாந்த், இன்னமும் வெறும் வார்த்தை ஜாலத்தை மட்டுமே நம்பி செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் பதவியில் தனக்கு ஆசை இல்லை, தான் கட்சித் தலைவராக மட்டும் செயல்படுவேன் என்று எந்த கட்சியையும் ஆரம்பிக்காமல் ரஜினி கூறியிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்.

நேத்து நைட்

நேத்து நைட்

கட்சியையும், ஆட்சியையும் ஒருவரே நடத்தக் கூடாது என்றும், முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும், துடிப்பு மிக்க இளைஞர் ஒருவரைத் தான் முதல்வர் பதவிக்கு நியமிப்பேன் என்றும் நடிகர் ரஜினி இன்று பேசிய பேச்சுக்களை கேட்ட விஜய் ரசிகர், "நேத்து நைட் டிவியில சர்கார் படம் பார்த்து இருப்பார் போல; அந்த கதையை இங்க வந்து பேசிக்கிட்டு இருக்கார்" என கலாய்த்து வருகின்றனர்.

அப்பவே வந்துடுச்சு

அப்பவே வந்துடுச்சு

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சியை இன்னும் ஆரம்பிக்காமல், முதல்வர் நாற்காலிக்கு தான் ஆசைப்பட வில்லை என்பதையே திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறார். சர்கார் படத்தின் கிளைமேக்ஸில் விஜய் பேசும், "உங்க ஊர் தலைவனை நீங்க தேர்ந்தெடுங்க" என்ற ரேஞ்சில் தான் தற்போது பேசியுள்ளார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

நடிக்க ஆசை

நடிக்க ஆசை

என்னமோ, நாளைக்கே முதல்வர் பதவி கிடைத்து விடுவது போல, அந்த பதவிக்கு தான் ஆசைப்படவில்லை என்பதை சொல்லி வருகிறார் ரஜினி என்றும், அண்ணாத்த படத்தை முடித்து விட்டு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தான், கட்சி தலைவராக மட்டுமே இருந்து விட நினைக்கிறாரோ என்னவோ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

முருகதாஸ் சொன்ன யோசனை

முருகதாஸ் சொன்ன யோசனை

சர்கார் படத்தை தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். தர்பார் படப்பிடிப்பின் போது, இந்த சர்கார் யோசனையை ஏ.ஆர். முருகதாஸ் தான் நடிகர் ரஜினிகாந்துக்கு சொல்லி இருப்பார். அதையே தான் தலைவர் இப்போ ஃபாலோ பண்ணுகிறார் என்றும் பங்கம் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X