ரஜினி, விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித் வீட்டுக்கும் வெடி குண்டு மிரட்டல்.. கோலிவுட்டில் பரபரப்பு!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.

Recommended Video

Vijay யை சீண்டும் Meera Mithun, கொதிக்கும் ரசிகர்கள்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தல அஜித்

தல அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார் நடிகர் அஜித். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களுக்கு ஹிட் அடித்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

வலிமை

வலிமை

போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் இந்தி படமான பிங்க் ரீமேக்கில் நடித்திருந்த நடிகர் அஜித், மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படம், அடுத்த ஆண்டு சம்மருக்குத் தான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

ரஜினி, விஜய்

ரஜினி, விஜய்

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு இதே போல வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தை சோதனை செய்ததில், அது வெறும் புரளி என தெரியவந்தது. அதே போல நடிகர் விஜய் வீட்டுக்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, அது புரளி என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் கால் ஒன்று வந்து, கட் ஆகியுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் நடிகர் அஜித் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.

இதுவும் புரளி

இதுவும் புரளி

புகார் வந்ததை அடுத்து, போலீசார் நடத்திய ஆய்வில், இதுவும் வெறும் புரளி என தெரியவந்திருக்கிறது. நடிகர் அஜித் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பிரபலங்களின் வீடுகளுக்கு இது போல அவ்வப்போது வெடி குண்டு மிரட்டல் விடப்படுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X