மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ரஜினிகாந்த் ட்வீட்.. டிரெண்டாகும் #கந்தனுக்கு_அரோகரா

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து, கேவலமாக அதற்கு விளக்கம் சொன்ன கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் போட்டிருக்கிறார்.

அவரது ட்வீட் வெளியான நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள், #கந்தனுக்கு_அரோகரா என்றும், #Thalaivar மற்றும் #Rajinikanth உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

படையப்பா படத்தில் வேலுடன் ரஜினிகாந்த் இருக்கும் காட்சிகளை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

500 வீடியோக்களும் நீக்கம்

500 வீடியோக்களும் நீக்கம்

இந்து மதக் கடவுள்களையும், புராணங்களையும் அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல், வெளியிட்டு இருந்த கந்த சஷ்டி கவசம் வீடியோ சர்ச்சையை கிளப்பின. அதன் தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து, அந்த யூடியூப் சேனலில் உள்ள 500 வீடியோக்களும் நீக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் அரசு நடவடிக்கை எடுத்தது.

குரல் கொடுத்த ரஜினி

குரல் கொடுத்த ரஜினி

கந்தசஷ்டி விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது, #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹாஷ்டேக்கை போட்டு, மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், கடவுள் கந்தனை கேவலமாக பேசியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என ரஜினிகாந்த் ட்வீட் போட்டுள்ளார்.

#கந்தனுக்கு_அரோகரா

#கந்தனுக்கு_அரோகரா

நடிகர் ரஜினிகாந்த் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலையும், இந்து மத நம்பிக்கைகளை அவமதிப்பவர்களுக்கு எதிராகவும் தனது வலிமையான கண்டனத்தை பதிவு செய்த நிலையில், #கந்தனுக்கு_அரோகரா , #Thalaivar மற்றும் #Rajinikanth உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Rajinikanth Royal Look in Lamborghini Goes Viral
படையப்பா போட்டோஸ்

படையப்பா போட்டோஸ்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படையப்பா படத்தில், ஆறு படையப்பன் என முருகனின் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அந்த படத்தில் முருகனின் வேல் சாட்சியாக, முருகன் கோயிலில் தான் திருமணங்கள் நடைபெறும், அந்த போட்டோக்களை தற்போது ரஜினி ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X