twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உளறும் பிரபலங்கள்.. டோலிவுட் சூப்பர்ஸ்டார் ட்வீட்டும் டெலிட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலை கூறியதாக நடிகர் ரஜினிகாந்தின் ட்வீட்டை ட்விட்டர் இந்தியா அதிரடியாக டெலிட் செய்தது.

    இந்நிலையில், டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான பவன் கல்யாண் கொரோனா குறித்து பதிவிட்ட தவறான விழிப்புணர்வு பதிவையும் ட்விட்டர் இந்தியா நீக்கியுள்ளது.

    After Rajinikanth, Pawan Kalyan fake information tweet also deleted!

    நடிகர் ரஜினிகாந்த் தனது வீடியோ பதிவில் சொன்ன அதே 14 மணி நேர பிரச்சனையையே, நடிகர் பவன் கல்யாணும் தனது ட்வீட்டில் கூறியிருந்தார்.

    பிரபலங்கள், கொரோனா குறித்து பேசும்போது, நன்றாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் இல்லை என்றால், பேசாமல் இருப்பதே நல்லது என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    கொரோனா போன்ற கொடிய நோய் தாக்கும் நேரத்திலும், அது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவர்களோ அல்லது விஞ்ஞானிகளோ கொடுக்காமல், இதுபோன்ற சினிமா நடிகர்களை வைத்து கொடுக்க சொல்வதன் விளைவு தான் இதுபோன்ற தவறான தகவல்கள் பரவ காரணம் என பொதுமக்கள் சிலர் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    After Rajinikanth, Pawan Kalyan fake information tweet also deleted!

    மேலும், சிலர், வாட்ஸப் வதந்திகளை நம்பி, 14 மணி நேரம் வீட்டில் முடங்கி கிடந்தால், கொரோனா வைரஸ் செத்து விடும் என்ற கருத்தை எப்படித்தான் இவர்கள் நம்புகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அட்லீஸ்ட் நிபுணர்களை ஆலோசித்த பின்னராவது, சூப்பர்ஸ்டார் நடிகர்கள் இதுபோன்ற விழிப்புணர்வு பேச்சுக்களை வெளியிட வேண்டும் எனவும் வச்சு செய்து வருகின்றனர்.

    English summary
    Twitter India take immediate action also for Tollywood Super Star Pawan Kalyan, After Rajinikanth’s tweet delete, Pawan’s tweet also deleted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X