ரகுல் ப்ரீத் சிங்கை தொடர்ந்து.. வவ்வாலாக மாறிய சமந்தா.. தலைகீழாக எப்படி யோகா செய்றாரு பாருங்க!

சென்னை: தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் போட்டோவை போட்டு நடிகை சமந்தா வைரலாக்கி வருகிறார்.

சமீபத்தில் கைகளை தரையில் ஊன்றி ஒட்டுமொத்த உடலையும் மேலே எழுப்பிய படி 'புஷ்' செய்து யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்க விட்ட சமந்தா, தற்போது, இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

கணவருடன் தினமும் காலையில் யோகா செய்து வரும் நடிகை சமந்தாவின் யோகா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

அடங்கிய சண்டை

அடங்கிய சண்டை

நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சமந்தா இடையே நடைபெற்ற பனிப்போர், ரசிகர்கள் சண்டையாக மாறி மிகப்பெரிய சர்ச்சையை சமூக வலைதளத்தில் கிளப்பியது. ஆனால், இரு நடிகைகளும், அதுகுறித்த அறிவிப்புகள் ஏதும் விடாத நிலையில், ஒரே வாரத்தில் புஷ் என அந்த ரசிகர்கள் சண்டை சத்தமே இல்லாமல் முடிவுக்கு வந்தது.

யோகாவில் கவனம்

யோகாவில் கவனம்

தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் மற்றும் அன்பான கணவர் நாக சைதன்யாவுடன் தினமும் யோகா செய்வதை பழக்கமாக கடைபிடித்து வருகிறார் நடிகை சமந்தா. மேலும், 48 நாட்கள் இஷா கிரியா யோகாவை செய்யப் போவதாகவும் சமீபத்தில் சமந்தா பதிவிட்டு இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

உடல்நலனில் அக்கறை

உடல்நலனில் அக்கறை

பரவி வரும் நோய் தொற்று காலத்தில், அனைவரும் இதுபோன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு, வெறும் அட்வைஸ் மட்டும் கொடுக்காமல், அவரே ரோல் மாடலாக இருந்து வித்தியாசமான யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருவது குறிபிடத்தக்கது.

வவ்வாலாக

வவ்வாலாக

ஊஞ்சல் போன்று புடவையை கட்டிக் கொண்டு, அதில் இரு கால்களையும் வைத்து, தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி நடிகை சமந்தா செய்யும் யோகா புகைப்படம் வேற லெவலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா சும்மா சிரிச்சாலே அந்த போட்டோவே லைக்ஸ் அள்ளும் நிலையில், இப்படி கஷ்டப்பட்டு செய்யும் யோகா புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வராமலா போகும்.

சாதிச்சிட்டோம்

சாதிச்சிட்டோம்

அந்தரத்தில் தொங்கியபடி இப்படியொரு யோகா போஸை செய்து விட்டு நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் கேப்ஷனாக, "வாழ்த்துக்கள்.. நீயும், நானும் ஜூலையில் இதை சாதிச்சிட்டோம்" என கணவர் நாக சைதன்யாவை குறிப்பிட்டு சொல்லி இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Recommended Video

TALKING 2 MUCH EP-08 | கொரோனாவிற்கும் தமிழ் பெயர் !! | FILMIBEAT TAMIL
ஏற்கனவே

ஏற்கனவே

இதுபோல வவ்வாலாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை நடிகை ரகுல் ப்ரீத் சிங், முன்னதாகவே செய்து அசத்தியுள்ளார். சில ரசிகர்கள் அந்த புகைப்படத்தையும் சமந்தா புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து, யார் அழகு என்று, யார் சூப்பரா யோகா செய்திருக்கிறார் என்றும் கம்பேர் பண்ணியும் கமெண்ட்டுகளை போட்டு வருவது ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X