ராமராஜன், மோகன் வரிசையில் அடுத்த ஆப்பு கவுண்டமணிக்கா?.. ’ஒத்த ஓட்டு முத்தையா’ தப்பிக்குமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்து வந்தாலும் ஒரு படத்தின் கதை சரியாக இல்லை என்றால் கூட அந்த படத்தை ரசிகர்கள் ஃபிளாப் ஆக்கி விடுகின்றனர். தர்பார், அண்ணாத்த படங்கள் சமீபத்தில் அதற்கு சாட்சியாக உள்ளன.

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு மற்றும் லியோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவராத நிலையில், கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குவிந்தன.

goundamani ramarajan mohan yogi babu

தொடர்ந்து டாப் ஹீரோவாக வலம் வரும் இவர்களுக்கே இப்படி ஒரு நிலைமை உள்ள நிலையில் பல ஆண்டுகள் கழித்து சினிமாவில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களின் படங்களை பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், அனைத்து ரசிகர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய படமாகவும் சமீபகால படங்கள் வராமல் சொதப்பி வரும் நிலையில் தொடர்ந்து மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் ட்ரோல் செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

சொதப்பிய ராமராஜன்: ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தின் புரமோஷனுக்காக ராமராஜன் மெனக்கெட்டு பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து தனது பழைய வரலாறுகளை எல்லாம் பேசி வந்தார். ஆனால், ராமராஜனின் சாமானியன் படம் வெளியானதும் மக்கள் அதை கொண்டாடவே இல்லை. அந்த படம் பெரிய தோல்விப் படமாக மாறியது.

மோகன் படம் என்ன ஆச்சு?: ராமராஜன் பட்டது போதாது என வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்த ஹரா படம் கடந்த வாரம் வெளியானது. முதல் வெள்ளிக்கிழமை கூட படத்தை பார்க்க மக்கள் கூட்டம் பெரிதாக இல்லாத நிலையில், ஒரே படத்தில் விஜய் ஸ்ரீ இயக்கிய ஹரா திரைப்படம் ஆல் அவுட் ஆனது. இந்த வயதிலும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என இவர்கள் அடம்பிடிப்பதில் தவறு இல்லை என்றும் சூரி போல இயக்குநர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அடுத்து கவுண்டமணி வராரு?: 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'கிச்சா வயசு 16' போன்ற படங்களை இயக்கிய சாய் ராஜகோபால் இயக்கத்தில் 83 வயதில் ஹீரோவாக கவுண்டமணி நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' படம் விரைவில் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யோகி பாபு கவுண்டமணிக்கு போட்டியாக எதிர்கட்சி அரசியல்வாதியாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படமாவது கவுண்டமணிக்கு கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X