»   »  சான்ஸ் வேணுமா.. படுக்கைக்கு வா.. பாலிவுட் நடிகரின் திகில் தகவல்!

சான்ஸ் வேணுமா.. படுக்கைக்கு வா.. பாலிவுட் நடிகரின் திகில் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் நுழைய முயன்றபோது வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வருமாறு என்னை அழைத்தார்கள் என நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வருமாறு அழைக்கப்படுவதாக ஏற்கனவே பல நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து விக்கி டோனார் படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் அதே பிரச்சனை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

படுக்கை

படுக்கை

நான் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கையில் பெரிய திரையில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் காஸ்டிங் டைரக்டர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.

கே அல்ல

கே அல்ல

நான் ஓரினச்சேர்க்கையாளன் அல்ல. அப்படி இருந்திருந்திருந்தால் நீங்கள் படுக்கைக்கு அழைத்தது குறித்து யோசித்திருப்பேன். ஆனால் என்னால் முடியாது என்று காஸ்டிங் டைரக்டரிடம் தெரிவித்துவிட்டேன்.

இருக்குப்பா

இருக்குப்பா

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் பாலிவுட்டில் தொடர்ந்து தாக்குப்பிடிக்க உங்களின் திறமை மட்டும் போதும் என்று ஆயுஷ்மான் தெரிவித்துள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு தேடியபோது அவரையும் ஒரு ஆண் காஸ்டிங் டைரக்டர் மும்பை அந்தேரியில் உள்ள அவரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து அவர் ரன்வீரை படுக்கைக்கு அழைத்துள்ளார்.

முடியாது

முடியாது

இது குறித்து ரன்வீர் கூறுகையில், நான் படுக்கைக்கு வர மாட்டேன் என்று கூறினேன். அதற்கு அவர் நான் உங்களுடைய ஆணுறுப்பை தொட்டு மட்டுமாவது பார்க்கிறேனே இல்லை என்றால் சும்மா பார்க்கவாவது செய்கிறேனே என்றார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன் என்றார்.

கங்கனா

கங்கனா

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் சிலரின் படுக்கைக்கு செல்ல வேண்டி உள்ளது என்று நடிகைகள் கங்கனா ரனாவத், கல்கி கொச்லின் உள்ளிட்டோரும் முன்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Ranveer Singh, Vicky Donor actor Ayushmann Khurana also talked about casting couch in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil