Kajol Deep Fake Video: ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து நடிகை கஜோலையும் துரத்தும் டீப் ஃபேக் வீடியோ!

மும்பை: காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய வீடியோவை அப்படியே சிம்ரன் ஆடியது போல ஏஐ மூலம் மாற்றும் போது அனைவரும் பாராட்ட ஆரம்பித்த நிலையில், அதன் பின் விளைவுகளை யாரும் கவனிக்கவில்லை.

தற்போது நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிய வண்ணம் வெளியாகி வரும் போது தான் அதன் அச்சத்தை உணர ஆரம்பித்துள்ளனர்.

After Rashmika Mandanna Kajol also strucks in Deep Fake video

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீஃப் ஃபேக் வீடியோக்களும் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளன.

ஆபாச எடிட்டுகள்: நடிகைகளை வைத்து காலம் காலமாக ஆபாச போட்டோ எடிட்கள் செய்யப்பட்டு பலான வெப்சைட்டுகளில் வெளியாகி வந்த நிலையில், சில தளங்களில் முகத்துக்கும் உடலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் கேவலமாக எடிட் செய்யப்பட்டு வெளியாகும் வீடியோக்களே தீயாக பரவி நடிகைகளை அச்சுறுத்தி வந்தன.

இந்நிலையில், அதை விட மோசமாக வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் அச்சு அசல் அதே நடிகையின் ரியல் வீடியோவே தோற்றுவிடும் அளவுக்கு ஃபேக்கான ஏஐ எடிட் வீடியோக்கள் பெரும் ஆபத்தை உண்டாக்கும் வகையில் உருவாகி வருகின்றன.

எதிர்ப்பு தெரிவித்த ராஷ்மிகா: நடிகை தமன்னா காவாலா பாட்டுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை சிம்ரன் ஆடுவது போன்றும் கியாரா அத்வானி, காஜல் அகர்வால் என பல நடிகைகள் நடனம் ஆடுவது போன்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் பகிரப்படும் போது பலரும் அதை பார்த்து ரசித்தனர். ஆனால், தன்னுடைய போலியான வீடியோவை பார்த்து முதன்முதலில் இது தவறான விஷயம் என ராஷ்மிகா மந்தனா எதிர்ப்பு குரல் தெரிவிக்க அமிதாப் பச்சன் முதல் பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்த வீடியோவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கஜோலும் சிக்கினார்: இந்நிலையில், சமீபத்தில் கத்ரீனா கைஃப் வீடியோ ஒன்றும் டீஃப் ஃபேக் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது நடிகை கஜோலின் வீடியோவும் டீப் ஃபேக்கில் சிக்கியிருக்கிறது. ”Get Ready with Me" எனும் டிரெண்டிங் ரீல்ஸில் பிரபலங்கள் ரெடியாகும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், வேறு ஒரு மாடல் வெளியிட்ட வீடியோவில் முகத்தை எடிட் செய்து கஜோல் வீடியோ போல சித்தரித்துள்ளனர். இன்னும் இந்த ஏஐ என்னவெல்லாம் பிரச்சனைகளை உருவாக்கும் என்றே தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X