Mahalakshmi: ரிலீஸான கணவர் ரவீந்தர்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை மகாலட்சுமி!
சென்னை: கணவர் ரவீந்தர் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், நடிகை மகாலட்சுமி மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்கிறேன் என்று வனிதாவை வச்சு செய்து பிரபலமானார்.

பண மோசடி புகார்: தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இந்த நேரம் எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களின் காதல் கதை தான் ஓடிக்கொண்டு இருந்தது. இருவரும் வெற்றிகரமாக தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் மோடி புகார் ஒன்றில் தயாரிப்பாளர் ரவீந்திரனை போலீசார் கைது செய்தனர்.
திடீர் கைது: சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகார் உறுதியானதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிபந்தனை ஜாமீன்: இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
ஐ லவ் யூ அம்மு: இந்நிலையில் நடிகை மகாலட்சுமி ஜாமீனில் வந்திருக்கும் தனது ஆசை கணவரை கட்டிபிடித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, அதில், என் மகிழ்ச்சிக்கு காரணம் நீ, ஒருவர் மீதுள்ள அன்புக்குக் காரணம் நம்பிக்கைதான்,ஆனால் இங்கே என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது. அதே அன்பைப் பொழிந்து முன்பு போல் என்னைக் காப்பாயாக.. Love you loadsssss Ammu என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் உங்க ரொமான்சை ஆரம்பிச்சிட்டீங்களா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











