என்டிஆர்30 படத்தின் பூஜை குறித்த அப்டேட்.. போஸ்டரே சும்மா அதிருதுல்ல!

ஐதராபாத் : பிரபல தெலுங்குப்பட ஹீரோ ஜூனியர் என்டிஆரின் 30வது படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் அவர் தென்னிந்திய மொழிகளிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் பூஜை குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஜூனியர் என்டிஆர்

நடிகர் ஜூனியர் என்டிஆர்

நடிகர் ஜூனியர் என்டிஆர், தெலுங்குப்படவுலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹீரோவாக காணப்படுகிறார். மற்றவர்களிடம் இனிமையாக பழகும் இவரது அப்ரோச் திரையுலகினரை அதிக ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் பௌன்சர்களை மீறி தன்னை நோக்கி வந்த ரசிகரையும் இனிமையாக கையாண்ட இவரது பக்குவம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இவரது நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

என்டிஆர்30 படம்

என்டிஆர்30 படம்

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு தற்போது தன்னுடைய 30வது படத்தில் இயக்குநர் கொரட்டாலா சிவாவுடன் இணைகிறார் ஜூனியர் என்டிஆர். ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து இவர் போட்ட ஆட்டம் மிகவும் சிறப்பான வரவேற்பை சர்வதேச அளவில் பெற்றுள்ளது. இந்தப் பாடல் ஆஸ்கரை வெல்வதற்கு இவர்களது நடனமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரின் அப்பாவித்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி

மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி

ஜனதா கேரேஜ் படத்திற்கு பிறகு கொரட்டாலா சிவாவுடன் ஜூனியர் என்டிஆர் இந்தப் படத்தின்மூலம் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கமிட்டாகியுள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய மொழிப் படங்களில் தன்னுடைய என்ட்ரியை கொடுக்கவுள்ளார். இதற்காக அவருக்கு 5 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மற்ற நடிகைகளைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸ்

2024ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த புத்தாண்டையொட்டி படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் வாளை பிடித்தபடி ஜூனியர் என்டிஆர் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது மற்றொரு போஸ்டரை படத்தின் பூஜை குறித்த அறிவிப்புடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

23ம் தேதி பூஜையுடன் துவக்கம்

23ம் தேதி பூஜையுடன் துவக்கம்

இதையொட்டி வரும் 23ம் தேதி படம் பூஜையுடன் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் கடலில் பிரம்மாண்டமான கத்தி வெளிப்படும் வகையில் காணப்படுகிறது. பின்னால் பெரிய அளவில் தீப்பிடித்து எரிவதாகவும் காணப்படுகிறது. பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X