Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சமந்தாவை தொடர்ந்து கேஜிஎஃப் ஹீரோயின் உடன் ஜக்கி வாசுதேவ்.. டிரெண்டாகும் Save Soil புகைப்படங்கள்!
சென்னை: நடிகை சமந்தா சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் உடன் இணைந்து Save Soil புரமோஷனில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
Recommended Video
இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி ஜக்கி வாசுதேவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
ஜக்கி வாசுதேவ் வெள்ளியங்கிரி மலை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் நடத்தும் மகாசிவராத்திரி விழாவுக்கு ஆண்டுதோறும் கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை அணிவகுத்து செல்வது குறிப்பிடத்தக்கது.
சத்குருவிற்காக சமந்தா செய்த காரியம்.. இது தேவையா? விளாசும் நெட்டிசன்கள்!

ஜக்கி வாசுதேவ் உடன் சமந்தா
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற Save Soil நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். சமந்தா மற்றும் ஜக்கி வாசுதேவ் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், இருவரும் மண் வளத்தை காக்க வேண்டும் என்கிற முன்னெடுப்பை எடுத்துக் கூறிய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் டிரெண்டாகின.

சிவராத்திரி விழாவில் சமந்தா
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மகாசிவராத்திரி விழாவிலும் நடிகை சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்களும் முன்னதாக வெளியாகின. சமந்தா மட்டுமின்றி தமன்னா, லக்ஷ்மி மஞ்சு, பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், மெளனி ராய் என ஏகப்பட்ட நடிகைகள் ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

கேஜிஎஃப் ஹீரோயின்
இந்நிலையில், கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 மற்றும் விக்ரமின் கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீனிதி ஷெட்டியும் ஜக்கி வாசுதேவை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் ஸ்ரீனிதி ஷெட்டி.

கையைப்பிடித்து
மஞ்சள் நிற டிசர்ட், கருப்பு நிற பேன்ட் அணிந்து கொண்டு கண்களில் கூலர்ஸ் அணிந்தபடி ஜக்கி வாசுதேவ் இருக்க, சிமெண்ட் கலர் சுடிதாரில் செம க்யூட்டாக இருக்கும் ஸ்ரீனிதி ஷெட்டியின் கைகளை பிடித்தப்படி ஜக்கி வாசுதேவ் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

ஒன்றாக வாக்கிங்
Save Soil பேனரை கையில் பிடித்தபடியும், ஜக்கி வாசுதேவ் உடன் நடந்து கொண்டே பேசி செல்லும்படியான புகைப்படங்களையும் நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மண் வளத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் கேப்ஷன் போட்டு இருக்கிறார் கேஜிஎஃப் 2 நடிகை.

கோப்ரா ஹீரோயின்
கேஜிஎஃப் முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி அடுத்ததாக விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து முடித்தார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. அதன் பிறகு கேஜிஎஃப் 2 ஆரம்பித்து அந்த படமும் வெளியாகி விட்டது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி கோப்ரா வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான புரமோஷன் வேலைகள் எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.