விஜய் வாயில் மீண்டும் சிகரெட்டா...கிளம்பியது சர்ச்சை...அன்று சர்க்கார்; இன்று பீஸ்ட்

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு தளபதி 65 என தற்காலிகமாக பெயர் வைத்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Recommended Video

பீகே பீட்ஸ்.. தளபதி 65 படத்தோட பேரு பீஸ்ட்.. இன்றைய டாப் 5 வைரல் சினிமா பீட்ஸ்!

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஜார்ஜியாவில் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்ததும், ஜுலை மாதத்தில் துவங்கப்பட உள்ளது.

டிரெண்டிங் ஆன ஃபஸ்ட்லுக்

டிரெண்டிங் ஆன ஃபஸ்ட்லுக்

இந்நிலையில் விஜய்யின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் இது டிரெண்டிங் ஆனது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டினர்.

செம மாஸான இரண்டாவது லுக்

செம மாஸான இரண்டாவது லுக்

இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு, அதாவது சரியாக 6 மணி நேர இடைவெளியில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துடன் படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இதுவும் செம மாஸாக, அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் இருந்தது.

சர்க்கார் போலவே சர்ச்சை

சர்க்கார் போலவே சர்ச்சை

இதனை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும், மறு பக்கம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு காரணம் இரண்டாவது லுக்கில் விஜய், வாயில் சிகரெட்டுடன் நிற்பது தான். இதற்கு முன் சர்க்கார் படத்தின் ஃபஸ்ட்லுக்கிலும் விஜய், வாயில் சிகரெட், மடியில் லேப்டாப்புடன் காஸ்ட்லி காரில் வருவது போன்ற காட்சி இடம்பெற்றது.

மாற்றப்பட்ட சர்க்கார் ஃபஸ்ட்லுக்

மாற்றப்பட்ட சர்க்கார் ஃபஸ்ட்லுக்

இது சர்ச்சையாக்கப்பட்டு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டு, மீண்டும் புதிய ஃபஸ்ட்லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்த விஜய், எப்போதும் குடிபோதையில் இருப்பது போல் காட்டப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது.

பல சர்ச்சைகளை பார்த்த சர்க்கார்

பல சர்ச்சைகளை பார்த்த சர்க்கார்

சர்க்கார் படத்தின் போது ஃபஸ்ட்லுக், வரலட்சுமி நடித்த கேரக்டரின் பெயர் என பலவும் சர்ச்சையானது. அதே போன்று பாடல் ஒன்றில் அரசின் இலவச பொருட்களை தீயில் இடுவது போன்ற காட்சியும் சர்ச்சையானது. எதிர்ப்பு கிளம்பியதாலோ என்னவோ இந்த படத்தை பலரும் பார்த்தனர்.

தனுஷ் படத்திற்கும் இதே தான்

தனுஷ் படத்திற்கும் இதே தான்

தற்போது இதே போன்ற சர்ச்சையை பீஸ்ட் படமும் சந்தித்துள்ளது. விஜய் நடித்த படங்கள் மட்டுமல்ல தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் தனுஷ் வாயில் சிகரெட்டுடன் நடந்து வரும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஒருவேளை இது போன்ற சர்ச்சைகள் படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமையும் என படக்குழுவினர் நினைக்கிறார்களோ என்னவோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X