பிகில் ட்ரெயிலர்ல அந்த டயலாக் கேட்டீங்களா.. என்னோட மகள்தான்.. கண்ணீர்விட்டு உருகிய ரோபோ சங்கர்!

Recommended Video

Bigil Spots Found : Trailer பார்த்து கதறி அழுத Robo Shankar-வீடியோ

சென்னை: பிகில் ட்ரெயிலரில் தனது மகளை பார்த்ததும் கண்கள் குளமாகிவிட்டதாக நகைச்சுவை நடிகரான ரோபோ சங்காள நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியிருக்கும் பிகில் படத்தின் ட்ரெயிலர் கடந்த சனிக்கிழமை வெளியானது. இதுவரை இரண்டரை கோடிக்கும் மேல் வியூஸ்களை அள்ளியிருக்கிறது.

படத்தின் ட்ரெயிலரை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் கிங் ஷாரூக் கான் முதல் ஹாலிவுட் கிங் பில் டுயூக் வரை அட்லியை பாராட்டி விட்டனர்.

எங்க அப்பாவும் குண்டு..

எங்க அப்பாவும் குண்டு..

இந்நிலையில் பிகில் படத்தில் நடித்திருக்கும் தனது மகள் குறித்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். பிகில் ட்ரெயிலரில், எங்க அப்பாவும் குண்டு எங்க அம்மாவும் குண்டு நான் மட்டும் எப்படி இருப்பேன் என கால்பந்து குழுவில் உள்ள ஒரு சிறுமி கேட்பார்.

கண்கள் கலங்கிவிட்டது

கண்கள் கலங்கிவிட்டது

அந்த சிறுமிதான் ரோபோ சங்கரின் மகள். தன்னுடைய மகளை பிகில் ட்ரெயிலரில் பார்த்ததும் கண்கலங்கி விட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.

ட்ரெயிலர் அற்புதம்

தங்களுடன் பணியாற்ற என் மகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என இயக்குனர் அட்லி மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார் ரோபோ சங்கர். மேலும் பிகில் ட்ரெயிலர் அட்டகாசமாக இருப்பதாகவும் ரோபோ சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரோபோ சங்கரின் இந்த உருக்கமான டிவிட்டை பார்த்த ரசிகர்கள், அழகும் ஆடம்பரமும் மட்டும் ஒருவருக்கு முக்கியமில்லை அதை விட முக்கியம் அவர்களது திறமை தான் என்பதை தங்கள் மகள் இப்படத்தின் மூலம் நிறுபிப்பார் என்றும் தங்களது மகளின் வளர்சசிக்கு ஆதரவாய் தளபதியின் தம்பிகளாக நாங்கள் இருப்போம் என அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X